By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tuesday, Apr 14, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடும் அமெரிக்க திட்டம் – அதையும் மீறி ஈரான் கப்பல்கள் கடந்து சென்றதாக தகவல்

news team
Last updated: April 13, 2026 12:33 pm
By news team
Share
1 Min Read
ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடும் அமெரிக்க திட்டம் – அதையும் மீறி ஈரான் கப்பல்கள் கடந்து சென்றதாக தகவல்
SHARE

ஈரான் மீதான கடல்சார் முற்றுகையை அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், அதனையும் மீறி ஈரானியக் கொடியுடன் கூடிய மூன்று கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து அரபிக் கடலுக்குள் நுழைந்துள்ளதாக ‘மரைன் ட்ரஃபிக்’ (MarineTraffic) தரவுகள்தெரிவிக்கின்றன.ஹோர்முஸ் நீரணையை அமெரிக்க நேரப்படி இன்று காலை 10 மணி முதல் முற்றுகையிடுவதாக, அமெரிக்க மத்திய கட்டளையகம் (US Central Command) தெரிவித்துள்ளது.ஈரானியத் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்து கடல்சார் போக்குவரத்திற்கும் எதிராக இந்தத் தடை அமுல்படுத்தப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.எனினும், இத்தகைய முற்றுகையானது சர்வதேச கடல்சார் சட்டங்களை மீறும் செயலாக அமையக்கூடும் என, பிபிசி ஊடகத்திடம் கருத்து தெரிவித்துள்ள மூன்று சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.மேலும், இராணுவ ரீதியாக அமுல்படுத்தப்படும் இந்த முற்றுகை, தற்போது நடைமுறையில் உள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக அமையாதா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.கடந்த செவ்வாய்கிழமை மாலை போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாகக் குறைந்தது 60 கப்பல்கள் கடந்துள்ளன.போர்நிறுத்தத்திற்கு முந்தைய காலத்தை விட இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.போர் தொடங்குவதற்கு முன்னதாக, நாளொன்றுக்கு சுமார் 138 கப்பல்கள் இந்த நீரிணை வழியாகப் பயணித்ததாகக் கூட்டு கடல்சார் தகவல் மையம் தெரிவித்துள்ளது.தற்போதுள்ள சூழலில், அமெரிக்காவின் இந்த முற்றுகை அறிவிப்பு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

TAGGED:IranIran-Israel Warmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

போப் லியோவை விமர்சித்த டிரம்புக்கு ஈரான் அதிபர் கடும் பதில் – சர்ச்சையை ஏற்படுத்திய ஏஐ புகைப்படம்

போப் லியோ, 'நான் டிரம்ப் நிர்வாகத்திற்கோ, உண்மைகளை பேசுவதற்கோ அஞ்சவில்லை. தாக்குதல்களுக்கும் போருக்கும் எதிராக நான்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

வென்னப்புவையில் காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு - காதலன் வைத்தியசாலையில்
உள்நாடு

வென்னப்புவையில் காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு – காதலன் வைத்தியசாலையில்

By news team
அடுத்த 10 ஆண்டுகளில் சந்திரனில் அணு மின் நிலையம் – ரஷ்யா திட்டம்
உலகம்

அடுத்த 10 ஆண்டுகளில் சந்திரனில் அணு மின் நிலையம் – ரஷ்யா திட்டம்

By news team
2026ல் 19 நாட்கள் இலங்கை முழுவதும் மதுபான விற்பனை தடை – மதுவரித் திணைக்களம் கடும் எச்சரிக்கை
உள்நாடு

2026ல் 19 நாட்கள் இலங்கை முழுவதும் மதுபான விற்பனை தடை – மதுவரித் திணைக்களம் கடும் எச்சரிக்கை

By news team
2026-ல் பாடசாலை நேரம் நீட்டிக்கப்படாது – கல்வி அமைச்சு
உள்நாடு

2026-ல் பாடசாலை நேரம் நீட்டிக்கப்படாது – கல்வி அமைச்சு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?