By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 27 வயது இளைஞர் கொலை – இருவர் படுகாயம்

news team
Last updated: April 13, 2026 11:09 am
By news team
Share
1 Min Read
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 27 வயது இளைஞர் கொலை – இருவர் படுகாயம்
SHARE

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.வட்டுக்கோட்டை பகுதியில் இந்த கோர சம்பவம் இடம்பெற்றுள்ளது.அத்துடன் இச்சம்பவத்தில் மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.தொல்புரம், கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோவிலடியை சேர்ந்த 27 வயதுடைய குகதீஸ்வரன் மயூரன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.அத்துடன் சபேஷ்வரன் ரஜீவன் மற்றும் கமலநாதன் பானுஷன் ஆகிய இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த பயங்கர சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,நேற்றுரவு கொட்டடியம்பதி ஆதி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றன. அந்த இடத்திற்கு மூன்று நண்பர்களுடன் வந்த சந்தேகநபர் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.இதன்போது குறித்த சந்தேகநபரின் தாக்குதலுக்கு உள்ளாகி பானுஷன் என்ற இளைஞர் படுகாயமடைந்தார்.அதன்பின்னர் சந்தேகநபர் தப்பி செல்ல முயன்றபோது கொலை செய்யப்பட்ட மயூரன், சந்தேகநபரை பிடிப்பதற்கு முயற்சித்துள்ளார்.இதன்போது சந்தேகநபர் மயூரன் மீதும் அதே கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதன்போது மயூரன் சம்பவ இடத்திலேயே விழுந்து உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் குறித்த சந்தேகநபர் தனக்கும் காயம் இருப்பதாக கூறி முறைப்பாடு செய்வதற்கு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.கொலை இடம்பெற்றமை தெரியாத பொலிஸார், குறித்த நபரை சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அதன்பின்னர் கொலை இடம்பெற்றமை தெரியவந்த நிலையில் சந்தேகநபரை வைத்தியசாலையில் வைத்து கைது செய்துள்ளனர், பொலிஸ் கண்காணிப்பில் அவர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகிறார்.இதேவேளை பானுஷனும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்தனர்.ஒரே ஊரை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கிடையே கடந்த 2021ஆம் ஆண்டு முதல் முரண்பாடு காணப்பட்டமையே இச் சம்பவத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இது குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAGGED:crimedeathmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இலங்கையில் கடும் வெப்ப அலை: 21 மாவட்டங்களுக்கு வானிலை திணைக்களம் எச்சரிக்கை
உள்நாடு

இலங்கையில் கடும் வெப்ப அலை: 21 மாவட்டங்களுக்கு வானிலை திணைக்களம் எச்சரிக்கை

By news team
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 2 கோடி 75 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 'குஷ்' போதைப்பொருளுடன் இந்தியா இளைஞன் கைது
உள்நாடு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 2 கோடி 75 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருளுடன் இந்தியா இளைஞன் கைது

By news team
இலங்கையில் வாழ்வதற்கான குறைந்தபட்ச மாதச் செலவு – புதிய தரவுகள் வெளியீடு
உள்நாடு

இலங்கையில் வாழ்வதற்கான குறைந்தபட்ச மாதச் செலவு – புதிய தரவுகள் வெளியீடு

By news team
ஒடிசாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்: காட்டில் பெற்றோர் உயிரிழப்பு – 5 வயது சிறுவன் உயிருடன் மீட்பு
இந்தியா

ஒடிசாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்: காட்டில் பெற்றோர் உயிரிழப்பு – 5 வயது சிறுவன் உயிருடன் மீட்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?