By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

பத்து இலட்சம் ரூபாய் லாட்டரி பரிசு பெற்ற நபர் வீடு திரும்பும் வழியில் நடந்த உந்துருளி விபத்தில் உயிரிழப்பு

news team
Last updated: April 13, 2026 4:31 am
By news team
Share
1 Min Read
பத்து இலட்சம் ரூபாய் லாட்டரி பரிசு பெற்ற நபர் வீடு திரும்பும் வழியில் நடந்த உந்துருளி விபத்தில் உயிரிழப்பு
SHARE

அதிர்ஷ்ட லாபச் சீட்டில் பரிசில் வென்ற பணத்தைப் பெற்றுக்கொண்டு உந்துருளியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நபர் ஒருவர், ஹொரணை – பொகுணுவிட்ட பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.பத்து இலட்சம் ரூபாய் பணப் பரிசை வென்றதையடுத்து, அதற்கான காசோலையைப் பெற்றுக்கொள்வதற்காக குறித்த நபர் தனது நண்பருடன் கொழும்புக்குச் சென்றுள்ளார்.பணத்தைப் பெற்றுக்கொண்டு மீண்டும் ஹொரண நோக்கி உந்துருளியில் சென்று கொண்டிருந்தபோது, பொகுணுவிட்ட பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.உந்துருளியை செலுத்திய நண்பருக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக, குறித்த உந்துருளி வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மதகு ஒன்றில் மோதியுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்த விபத்தில் உந்துருளியில் பின்னால் அமர்ந்து பயணித்த நபர் உயிரிழந்ததுடன், உந்துருளியை செலுத்தியவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்தில் உயிரிழந்தவர் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சண்முகம் ஆனந்தன் என்ற ஒரு பிள்ளையின் தந்தை ஆவார். இவர் கடந்த மூன்று வருடங்களாக கிரிஎல்ல பகுதியில் உள்ள ரஜமகா விகாரையில் தங்கியிருந்து அன்னதானம் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.ஆனந்தனுக்கு சிங்கள மொழியில் எழுதத் தெரியாத காரணத்தினால், பரிசுத் தொகையைத் தனது நண்பரின் பெயரிலேயே அவர் பெற்றுள்ளார். அந்தப் பணத்துடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பிய போதே இந்த மரணம் சம்பவித்துள்ளது.ஹொரண திடீர் மரண விசாரணை அதிகாரி சுமேத குணவர்தன மேற்கொண்ட விசாரணைகளின்படி, மதகில் மோதியதில் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் மற்றும் உடலின் உட்புற உறுப்புகள் சேதமடைந்தமையே மரணத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGGED:accidentdeathmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

கண்டி தலாத்துஒய விபத்தில் இரண்டு வயது சிறுமி உயிரிழப்பு
உள்நாடு

கண்டி தலாத்துஒய விபத்தில் இரண்டு வயது சிறுமி உயிரிழப்பு

By news team
லலித் – குகன் வழக்கில் இணையவழி சாட்சியம்: நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய
உள்நாடு

லலித் – குகன் வழக்கில் இணையவழி சாட்சியம்: நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய

By news team
கடனை திருப்பிச் செலுத்தாததால் கடத்தி நாய் கூண்டில் அடைத்து சித்திரவதை செய்த கும்பல் கைது
உள்நாடு

கடனை திருப்பிச் செலுத்தாததால் கடத்தி நாய் கூண்டில் அடைத்து சித்திரவதை செய்த கும்பல் கைது

By news team
மண்முனை பகுதியில் வெற்றிலை மென்று வெதுப்பக உணவு விற்ற நபருக்கு எதிராக சுகாதார நடவடிக்கை
உள்நாடு

மண்முனை பகுதியில் வெற்றிலை மென்று வெதுப்பக உணவு விற்ற நபருக்கு எதிராக சுகாதார நடவடிக்கை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?