By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tuesday, Apr 14, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

புறக்கோட்டை பஸ் நிலையத்தில் சேதப்படுத்தும் நபர்களுக்கு கடும் நடவடிக்கை – போக்குவரத்து பிரதி அமைச்சர் எச்சரிக்கை

news team
Last updated: April 10, 2026 12:51 pm
By news team
Share
1 Min Read
புறக்கோட்டை பஸ் நிலையத்தில் சேதப்படுத்தும் நபர்களுக்கு கடும் நடவடிக்கை – போக்குவரத்து பிரதி அமைச்சர் எச்சரிக்கை
SHARE

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.இன்று (10) காலை புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார்.பஸ் நிலையத்திற்கு சேதம் விளைவிப்பது திட்டமிடப்பட்ட குழுக்களின் செயல் எனத் தெரிவித்த அமைச்சர், இதற்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்தவும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அங்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையில், பெண்களுக்கான கழிவறைகளில் பொருத்தப்பட்டிருந்த குழாய்களுக்கு முதல் நாளே சேதம் விளைவிக்கப்பட்ட நிலையில் அவை மீண்டும் பொருத்தப்பட்டதன் பின்னர் நேற்று (09) இரவு இரண்டாவது முறையாகவும் உடைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.இது ஒரு திட்டமிடப்பட்ட குழுவின் செயல் எனத் தெரிவித்த அமைச்சர், பஸ் நிலையத்தின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் இன்று கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாகவும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன,அரசியலில் நமக்கு வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம், ஆனால் இது பொதுமக்களின் சொத்து, மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டது.இவற்றுக்குச் சேதம் விளைவிக்க இடமளிக்க முடியாது, இதற்கு எதிராக நாம் சட்டத்தை அமுல்படுத்துவோம்.அதேபோல் இங்கு பாதுகாப்பையும் பலப்படுத்துவோம். சிசிடிவி (CCTV) கமராக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது, அதனை அதிகரிக்க எதிர்பார்க்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

TAGGED:arrestmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

போப் லியோவை விமர்சித்த டிரம்புக்கு ஈரான் அதிபர் கடும் பதில் – சர்ச்சையை ஏற்படுத்திய ஏஐ புகைப்படம்

போப் லியோ, 'நான் டிரம்ப் நிர்வாகத்திற்கோ, உண்மைகளை பேசுவதற்கோ அஞ்சவில்லை. தாக்குதல்களுக்கும் போருக்கும் எதிராக நான்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

நுவரெலியா ‘World’s End’ விபத்து: செல்பி எடுக்கச் சென்ற மாணவி கீழே விழுந்து மீட்பு
உள்நாடு

நுவரெலியா ‘World’s End’ விபத்து: செல்பி எடுக்கச் சென்ற மாணவி கீழே விழுந்து மீட்பு

By news team
நாளை மீண்டும் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு - அரச மருத்துவமனைகளின் சேவைகள் முடங்கும் அபாயம்
உள்நாடு

நாளை மீண்டும் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு – அரச மருத்துவமனைகளின் சேவைகள் முடங்கும் அபாயம்

By news team
இலங்கையில் இணைய நிதி மோசடி – 147 வெளிநாட்டு பிரஜைகள் கைது
உள்நாடு

இலங்கையில் இணைய நிதி மோசடி – 147 வெளிநாட்டு பிரஜைகள் கைது

By news team
அமெரிக்காவை உலுக்கிய பெரும் பனிப்புயல் – லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு
உலகம்

அமெரிக்காவை உலுக்கிய பெரும் பனிப்புயல் – லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?