By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

மின்சாரக் கட்டணத்தில் மீண்டும் உயர்வு வருமா? மேலும் 15% அதிகரிக்க புதிய முன்மொழிவு

news team
Last updated: April 9, 2026 7:52 am
By news team
Share
1 Min Read
மின்சாரக் கட்டணத்தில் மீண்டும் உயர்வு வருமா? மேலும் 15% அதிகரிக்க புதிய முன்மொழிவு
SHARE

தற்போதைய மின் உற்பத்திச் செலவினங்களைக் கருத்திற்கொண்டு, இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டிற்காக மின்சாரக் கட்டணத்தை மேலும் 15 சதவீதத்தால் அதிகரிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அவதானம் செலுத்தியுள்ளது.‘நேஷனல் சிஸ்டம் ஓபரேட்டர் பிரைவேட் லிமிடெட்’ (National System Operator Pvt Ltd) நிறுவனத்தினால் இந்த வருடத்தின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான இரண்டாம் காலாண்டிற்காக இந்த மேலதிக கட்டண உயர்வு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிக்க ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்த நிலையில், தற்போது மேலும் 15 சதவீத அதிகரிப்பு கோரப்பட்டுள்ளது.இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத், குறித்த யோசனை தொடர்பில் ஆணைக்குழு தற்போது விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.மின் உற்பத்திக்காக செலவிடப்படும் உண்மையான செலவினங்கள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள அதிகரிப்பின் அவசியம் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், அடுத்த சில நாட்களில் இது குறித்த இறுதித் தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.வருடத்தின் இரண்டாம் காலாண்டில் மின் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையிலேயே, தேசிய அமைப்பு கட்டுப்பாட்டு நிறுவனத்தினால் இந்த மேலதிக கட்டண உயர்வு கோரப்பட்டுள்ளது.ஒருவேளை இதற்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், ஏற்கனவே அமுல்படுத்தப்பட்ட 10 சதவீத அதிகரிப்புடன் சேர்த்து நுகர்வோர் மீதான மேலதிக சுமை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

தியத்தலாவையில் பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 42 பேர் காயம்
உள்நாடு

தியத்தலாவையில் பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 42 பேர் காயம்

By news team
இந்தோனேசியாவில் ஒரே நபருக்கு பகலில் மனிதன், இரவில் பல்லி போல முகமாற்றம்
உலகம்

இந்தோனேசியாவில் ஒரே நபருக்கு பகலில் மனிதன், இரவில் பல்லி போல முகமாற்றம்

By news team
யாழ்ப்பாணத்தில் கோர விபத்து - டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி இருவர் பலி
உள்நாடு

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து – டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி இருவர் பலி

By news team
அநுராதபுரத்தில் பெண்களுக்கு மயக்கமருந்து கொடுத்து கொள்ளை சம்பவம் – 17 இலட்சம் மதிப்புள்ள பணம், நகைகள் திருட்டு
உள்நாடு

அநுராதபுரத்தில் பெண்களுக்கு மயக்கமருந்து கொடுத்து கொள்ளை சம்பவம் – 17 இலட்சம் மதிப்புள்ள பணம், நகைகள் திருட்டு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?