By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

யாழில் மதுபோதையில் வீதியோரம் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி பலி

news team
Last updated: March 28, 2026 4:01 am
By news team
Share
1 Min Read
யாழில் மதுபோதையில் வீதியோரம் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி பலி
SHARE

யாழ்ப்பாணம், பருத்தித்துறை வீதியில் மதுபோதையில் வீதியோரம் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.கோப்பாய், கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த 56 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு 10.00 மணியளவில், குறித்த நபர் அதிக மதுபோதையில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் உறங்கியுள்ளார்.அந்தச் சந்தர்ப்பத்தில் வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, இன்று உடற்கூற்றுப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.மரணம் தொடர்பான விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.இதேவேளை, விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

TAGGED:accidentdeathmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

நுவரெலியா ‘World’s End’ விபத்து: செல்பி எடுக்கச் சென்ற மாணவி கீழே விழுந்து மீட்பு
உள்நாடு

நுவரெலியா ‘World’s End’ விபத்து: செல்பி எடுக்கச் சென்ற மாணவி கீழே விழுந்து மீட்பு

By news team
சிலாபத்தில் 14 வயது மாணவி துஸ்பிரயோகம்: உறவினர் கைதுஇ காதலனுக்கு பொலிஸார் வலைவீச்சு
உள்நாடு

சிலாபத்தில் 14 வயது மாணவி துஸ்பிரயோகம்: உறவினர் கைது காதலனுக்கு பொலிஸார் வலைவீச்சு

By news team
ரூ.6 இலட்சம் பெறுமதியான அலங்கார மலர்ச் செடிகளுடன் இலங்கை பயணி கைது
உள்நாடு

ரூ.6 இலட்சம் பெறுமதியான அலங்கார மலர்ச் செடிகளுடன் இலங்கை பயணி கைது

By news team
அரசாங்க ஊழல்களை வெளிப்படுத்தியதால் நெருக்கடிக்கு உள்ளாகிறேன் – கம்மன்பில குற்றச்சாட்டு
உள்நாடு

அரசாங்க ஊழல்களை வெளிப்படுத்தியதால் நெருக்கடிக்கு உள்ளாகிறேன் – கம்மன்பில குற்றச்சாட்டு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?