By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

அனுமதியின்றி பெற்றோல் வைத்த நபருக்கு சிறைத் தண்டனை – கல்கிசை நீதிமன்ற தீர்ப்பு

news team
Last updated: March 20, 2026 8:25 am
By news team
Share
1 Min Read
அனுமதியின்றி பெற்றோல் வைத்த நபருக்கு சிறைத் தண்டனை – கல்கிசை நீதிமன்ற தீர்ப்பு
SHARE

பெற்றோல் விற்பனை செய்வதற்கான முறையான அனுமதிப்பத்திரம் இன்றி, லொறி ஒன்றில் 65 லீட்டர் பெற்றோலை வைத்திருந்த நபருக்கு 2,500 ரூபாய் அபராதமும் 2 மாத கால கட்டாயச் சிறைத் தண்டனையும் விதித்து கல்கிசை நீதவான் பசான் அமரசேன நேற்று (19) உத்தரவிட்டார்.கல்கிசை, படோவிட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.வெள்ளவத்தை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இருந்து அதிகளவு எரிபொருளைப் பெற்றுக்கொண்டதாக வெள்ளவத்தை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்றுமுன்தினம் (18) இரவு அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.பின்னர் அவர் கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், லொறியில் இருந்த 4 எரிபொருள் கலன்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.கைப்பற்றப்பட்ட எரிபொருளின் மொத்த மதிப்பு சுமார் 20,000 ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGGED:arrestmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

யாழ் நகரில் கோர விபத்து: அறுவர் வைத்தியசாலையில் அனுமதி
உள்நாடு

யாழ் நகரில் கோர விபத்து: அறுவர் வைத்தியசாலையில் அனுமதி

By news team
மே மாதம் வரை கடும் வெப்பம் தொடரும் – வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை
உள்நாடு

மே மாதம் வரை கடும் வெப்பம் தொடரும் – வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

By news team
சிகிச்சைக்கு வந்த நோயாளியை சரமறியாக தாக்கிய மருத்துவர் – அதிர்ச்சி வீடியோ வைரல்
இந்தியா

சிகிச்சைக்கு வந்த நோயாளியை சரமறியாக தாக்கிய மருத்துவர் – அதிர்ச்சி வீடியோ வைரல்

By news team
வடக்குக்கான புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம் – ஏப்ரல் 9 முதல் பயணிகள் சேவை
உள்நாடு

வடக்குக்கான புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம் – ஏப்ரல் 9 முதல் பயணிகள் சேவை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?