By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து – இயந்திரம் ஒன்று முற்றாக சேதம்

news team
Last updated: March 7, 2026 8:00 pm
By news team
Share
1 Min Read
உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து – இயந்திரம் ஒன்று முற்றாக சேதம்
SHARE

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில், எரிபொருள் நிரப்பும் இயந்திரம் ஒன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.இன்று மதியம் எரிபொருள் தாங்கி ஊர்தியிலிருந்து, எரிபொருள் நிரப்பு நிலையத்தின் நிலக்கீழ் சேமிப்புத் தொட்டிக்குள் எரிபொருளை நிரப்பிக் கொண்டிருந்த போதே இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக அங்கிருந்த எரிபொருள் நிரப்பும் இயந்திரம் ஒன்றின் ஒரு பகுதி முற்றாக எரிந்து கருகியது.சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து செயற்பட்டனர்.அவர்களின் துரித முயற்சியால் தீ ஏனைய பகுதிகளுக்குப் பரவாமல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.இந்த விபத்தின் போது பல நூறு லீற்றர் பெற்றோல் தீயில் எரிந்து வீணாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அதிர்ஷ்டவசமாகப் பெரும் உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

TAGGED:firemuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

டெல்லி உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழப்பு
இந்தியா

டெல்லி உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

By news team
வித்யா கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி – பெண் மருத்துவரிடம் அத்துமீற முயற்சி
உள்நாடு

வித்யா கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி – பெண் மருத்துவரிடம் அத்துமீற முயற்சி

By news team
பண்டாரவளை பேருந்து நிலையத்தில் நிறுத்திய SLTB பேருந்து கடத்தல் – பின்னர் மீட்பு
உள்நாடு

பண்டாரவளை பேருந்து நிலையத்தில் நிறுத்திய SLTB பேருந்து கடத்தல் – பின்னர் மீட்பு

By news team
பண்டாரவளையில் தனியார் பேருந்தில் இளைஞனுடன் பிடிபட்ட மாணவி
உள்நாடு

பண்டாரவளையில் தனியார் பேருந்தில் இளைஞனுடன் பிடிபட்ட மாணவி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?