By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

குவைத் கடற்பரப்பில் எண்ணெய் தாங்கி கப்பல் மீது தாக்குதல் ;கடல் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்

news team
Last updated: March 5, 2026 9:11 am
By news team
Share
1 Min Read
குவைத் கடற்பரப்பில் எண்ணெய் தாங்கி கப்பல் மீது தாக்குதல் ;கடல் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்
SHARE

குவைத் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்றில் பலத்த வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பிரித்தானிய கடல்சார் பாதுகாப்பு அமைப்பான UKMTO தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கப்பலில் ஏற்பட்ட பலத்த வெடிப்பினைத் தொடர்ந்து, அதன் ஒரு சேமிப்புத் தொட்டியில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.மேலும், வெடிப்பைத் தொடர்ந்து கப்பலுக்குள் நீர் புகுந்துள்ள போதிலும், தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கப்பலில் இருந்த கடற்றொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அந்த இடத்திலிருந்து சிறிய படகு ஒன்று வேகமாகத் தப்பிச் சென்றதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.இப்பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், கடந்த சில நாட்களில் வளைகுடா கடற்பரப்பில் வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களின் ஒரு அங்கமாக இது பார்க்கப்படுகிறது.இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுத்து வருகின்றனர். இப்பகுதி வழியாகப் பயணம் செய்யும் ஏனைய கப்பல்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன.

TAGGED:IranKuwaitmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

மீண்டும் விலையை உயர்த்திய லங்கா IOC எரிபொருள்
உள்நாடு

மீண்டும் விலையை உயர்த்திய லங்கா IOC எரிபொருள்

By news team
அர்ச்சுனாவின் கருத்துகளை யாரும் கவனத்தில் எடுப்பதில்லை – அரசு
உள்நாடு

அர்ச்சுனாவின் கருத்துகளை யாரும் கவனத்தில் எடுப்பதில்லை – அரசு

By news team
இலங்கை நேரப்படி 3.30க்கு கிரிட்டிமாட்டி தீவில் புத்தாண்டு பிறந்தது
உலகம்

இலங்கை நேரப்படி 3.30க்கு கிரிட்டிமாட்டி தீவில் புத்தாண்டு பிறந்தது

By news team
பலாங்கொடயில் நத்தார் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்யும் போது கால்வாயில் விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு
உள்நாடு

பலாங்கொடயில் நத்தார் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்யும் போது கால்வாயில் விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?