By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

உணவட்டுன சுற்றுலா விடுதியில் 6.2 லட்சம் ரூபாய் திருட்டு: உரிமையாளர் மகள் கைது

news team
Last updated: February 23, 2026 9:08 pm
By news team
Share
1 Min Read
உணவட்டுன சுற்றுலா விடுதியில் 6.2 லட்சம் ரூபாய் திருட்டு: உரிமையாளர் மகள் கைது
SHARE

உணவட்டுன, பில்லகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணியொருவருக்குச் சொந்தமான 620,000 ரூபாய் பணத்தைத் திருடிய சம்பவம் தொடர்பில், அந்த விடுதி உரிமையாளரின் மகளை உணவட்டுன சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் உணவட்டுன சுற்றுலாப் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்து சில மணித்தியாலங்களுக்குள் விரைவாகச் செயற்பட்ட அதிகாரிகள், சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் தமது அறையில் மறைத்து வைத்திருந்த கெமராவொன்றில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளின் பின்னரே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.குறித்த சந்தேகநபர் பல தடவைகள் இரகசியமான முறையில் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த அறைக்குள் நுழைவது அந்தக் கெமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் மூலம் தெளிவாக அவதானிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்த விடுதியில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட 19 வயதுடைய குறித்த இளம்பெண், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நாளை (24) காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் உணவட்டுன சுற்றுலாப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TAGGED:arrestmuthalvanSri Lanka Policetamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கிளிநொச்சி தர்மபுரம் விபத்து – இரண்டு இளைஞர்கள் பலி

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கைது: கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
உள்நாடு

புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கைது: கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

By news team
8 கோரிக்கைகள் முன்வைத்து இன்று 6 மணி நேர வேலைநிறுத்தம் – மின்சார தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
உள்நாடு

8 கோரிக்கைகள் முன்வைத்து இன்று 6 மணி நேர வேலைநிறுத்தம் – மின்சார தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

By news team
நெல்லியடி பகுதியில் மருமகனின் வாள்வெட்டு – மாமியார் உயிரிழப்பு மாமனார் படுகாயம்
உள்நாடு

நெல்லியடி பகுதியில் மருமகனின் வாள்வெட்டு – மாமியார் உயிரிழப்பு மாமனார் படுகாயம்

By news team
அரச வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு முடிவு – அடுத்த நடவடிக்கை இன்று தீர்மானம்
உள்நாடு

அரச வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு முடிவு – அடுத்த நடவடிக்கை இன்று தீர்மானம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?