By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு: உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய பிரதிவாதிகள் தீர்மானம்

news team
Last updated: February 23, 2026 1:51 pm
By news team
Share
1 Min Read
அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு: உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய பிரதிவாதிகள் தீர்மானம்
SHARE

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் கொலை வழக்குத் தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதிவாதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.இன்று (23) இது தொடர்பாக ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் ஒருவருடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.உயர்நீதிமன்றத்திடம் இருந்து நியாயமான தீர்ப்பை எதிர்பார்ப்பதாக தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் மனைவி தெரிவித்தார். நாங்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்து, எமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து எழுத்துமூலமாக கடிதமொன்றை கையளிப்பதற்காக வந்தோம்.அத்துடன் எமது வழக்கு தொடர்பில் மேன்முறையீடு ஒன்றையும் சமர்ப்பிக்கவுள்ளோம். ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழாமிடம் இருந்து உண்மையில் ஒரு நியாயமான தீர்ப்பை எதிர்பார்க்கிறோம். ஜனாதிபதியிடமும் எமக்கு நீதியை வழங்குமாறு கேட்டுக்கொண்டோம். தற்போது நாம் மிகவும் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளோம்.பிள்ளைகளுடன் பல தாய்மார்கள் இருக்கிறார்கள். மூவரடங்கிய மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம்.எனினும், ஒரு நீதிபதி இவர்களை குற்றமற்றவர்கள் என விடுவித்தார்.அதுதான் எமக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. இவர்களுக்காக இன்னும் ஒரு சந்தர்ப்பம் இருப்பதாக கருதுகிறோம். அந்த சந்தர்ப்பத்தையே நாம் பயன்படுத்துகிறோம். மேன்முறையீடு செய்து இந்த 12 பேரையும் விடுவிப்பதே எமது ஒரே எதிர்பார்ப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்

TAGGED:anuramuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கிளிநொச்சி தர்மபுரம் விபத்து – இரண்டு இளைஞர்கள் பலி

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

உத்தரகாண்ட் மாநில அரசு பள்ளிகளில் பகவத் கீதா வாசிக்க கட்டாயம்
இந்தியா

உத்தரகாண்ட் மாநில அரசு பள்ளிகளில் பகவத் கீதா வாசிக்க கட்டாயம்

By news team
இந்தோனேசியாவில் ஒரே நபருக்கு பகலில் மனிதன், இரவில் பல்லி போல முகமாற்றம்
உலகம்

இந்தோனேசியாவில் ஒரே நபருக்கு பகலில் மனிதன், இரவில் பல்லி போல முகமாற்றம்

By news team
கொழும்பு ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு – மன்னாரைச் சேர்ந்த 20 வயது இளைஞன் உயிரிழப்பு
உள்நாடு

கொழும்பு ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு – மன்னாரைச் சேர்ந்த 20 வயது இளைஞன் உயிரிழப்பு

By news team
அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் விடுமுறை மாற்றம் – கல்வி அமைச்சு அறிவிப்பு
உள்நாடு

அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் விடுமுறை மாற்றம் – கல்வி அமைச்சு அறிவிப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?