By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tuesday, Apr 14, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

அமெரிக்காவில் போக்குவரத்து நெரிசல் வீதியில் அவசரமாகத் தரையிறங்கிய சிறிய விமானம்

news team
Last updated: February 10, 2026 10:36 pm
By news team
Share
1 Min Read
அமெரிக்காவில் போக்குவரத்து நெரிசல் வீதியில் அவசரமாகத் தரையிறங்கிய சிறிய விமானம்
SHARE

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் போக்குவரத்து நெரிசல் மிக்க வீதியொன்றில் அவசரமாகத் தரையிறங்கியது.இந்தச் சம்பவத்தில் பல வாகனங்கள் சேதமடைந்ததுடன், பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஜோர்ஜியா மாகாணத்தின் கெய்ன்ஸ்வில் (Gainesville) பகுதியில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.சிறிய ரக விமானம் ஒன்றின் எஞ்சினில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அதனைத் திட்டமிட்டபடி விமான நிலையத்தில் தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து, விமானி விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து, அருகிலிருந்த போக்குவரத்து நெரிசல் மிக்க பிரதான வீதியொன்றில் அவசரமாகத் தரையிறக்கியுள்ளார்.வீதியில் தரையிறங்கிய போது, கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்கிருந்த பல வாகனங்கள் மீது மோதியது.இதில் வாகனங்களில் பயணித்த பலர் காயமடைந்துள்ளதாகத் தரையிறங்கிய இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்த காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

TAGGED:americamuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

போப் லியோவை விமர்சித்த டிரம்புக்கு ஈரான் அதிபர் கடும் பதில் – சர்ச்சையை ஏற்படுத்திய ஏஐ புகைப்படம்

போப் லியோ, 'நான் டிரம்ப் நிர்வாகத்திற்கோ, உண்மைகளை பேசுவதற்கோ அஞ்சவில்லை. தாக்குதல்களுக்கும் போருக்கும் எதிராக நான்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

கிவுல் ஓயா திட்டம் சிங்களக் குடியேற்றம் அல்ல – அமைச்சர் இ.சந்திரசேகர் விளக்கம்
உள்நாடு

கிவுல் ஓயா திட்டம் சிங்களக் குடியேற்றம் அல்ல – அமைச்சர் இ.சந்திரசேகர் விளக்கம்

By news team
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் சாதனை – 8 தங்கப் பதக்கங்கள் வென்ற அபிராமி நற்குணம்
உள்நாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் சாதனை – 8 தங்கப் பதக்கங்கள் வென்ற அபிராமி நற்குணம்

By news team
“‘உங்களால்தான் போட்டி சாத்தியமானது’ – பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி, அனுரகுமாருக்கு நன்றி”
உள்நாடு

“‘உங்களால்தான் போட்டி சாத்தியமானது’ – பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி, அனுரகுமாருக்கு நன்றி”

By news team
ஹற்றன் பாடசாலையில் மாணவன் மீது தாக்குதல் – 3 பேர் கைது, மாணவன் வைத்தியசாலையில் அனுமதி
உள்நாடு

ஹற்றன் பாடசாலையில் மாணவன் மீது தாக்குதல் – 3 பேர் கைது, மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?