By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Feb 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

எம்.பிக்களின் ஓய்வூதியங்கள் இரத்து சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணல்ல – உயர் நீதிமன்றம் ஒப்புதல்

news team
Last updated: February 6, 2026 11:50 am
By news team
Share
1 Min Read
எம்.பிக்களின் ஓய்வூதியங்கள் இரத்து சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணல்ல – உயர் நீதிமன்றம் ஒப்புதல்
SHARE

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற ஓய்வூதியங்கள் சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணாக அமையாததால், இதனை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறான ஓய்வூதியச் சலுகைகளை வழங்குவது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் நோக்கமாக இருக்கவில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.தற்போதைய ஓய்வூதியச் சட்டமானது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டிற்கு ஒரு விதிவிலக்காகக் காணப்படுவதாகவும், புதிய சட்டமூலம் அந்த விதிவிலக்கை நீக்கி சமத்துவத்தை உறுதிப்படுத்துவதாகவும் நீதிமன்றம் விளக்கியுள்ளது.இந்தச் சட்டமூலமானது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது தற்போதைய அரசாங்கத்திற்கு மக்களால் வழங்கப்பட்ட தெளிவான ஆணையின் அடிப்படையிலேயே கொண்டுவரப்பட்டுள்ளது என்பதையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டு வந்த இந்த ஓய்வூதிய முறைமையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைப் பரிசீலித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.அரசியலமைப்பின் 121(1) உறுப்புரையின் கீழ் இந்தச் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றம் இது தொடர்பான தமது வியாக்கியானத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தது.அதற்கமையவே இந்த வியாக்கியானம் குறித்து இன்றைய பாராளுமன்ற அமர்வில் அறிவிக்கப்பட்டது.இதன்படி, இந்தச் சட்டமூலம் நடைமுறைக்கு வரும் திகதியிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பெற்று வந்த ஓய்வூதியக் கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGGED:muthalvanSri Lanka Parliamenttamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

எரிபொருள் நெருக்கடியால் கியூபா முடங்கும் அபாயம் அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை
உலகம்

எரிபொருள் நெருக்கடியால் கியூபா முடங்கும் அபாயம் அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

By news team
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாளை முதல் 27 வரை விசேட மேலதிக பேருந்து சேவைகள்
உள்நாடு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாளை முதல் 27 வரை விசேட மேலதிக பேருந்து சேவைகள்

By news team
வெடிகுண்டு அச்சுறுத்தலால் கண்டி மாவட்ட செயலகத்தில் தீவிர சோதனை
உள்நாடு

வெடிகுண்டு அச்சுறுத்தலால் கண்டி மாவட்ட செயலகத்தில் தீவிர சோதனை

By news team
இன்றைய வானிலை அறிக்கை
உள்நாடு

இன்றைய வானிலை அறிக்கை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?