By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Feb 20, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
இந்தியா

ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்து மனைவியை கோவிலுக்கு அழைத்துச் சென்ற கணவன் – நெகிழ்ச்சி சம்பவம்

news team
Last updated: February 6, 2026 8:57 am
By news team
Share
1 Min Read
ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்து மனைவியை கோவிலுக்கு அழைத்துச் சென்ற கணவன் – நெகிழ்ச்சி சம்பவம்
SHARE

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ராய்பாக் தாலுகா சிஞ்சோலி கிரா மத்தில் பிரசித்திபெற்ற மாயக்கா தேவி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருவிழா தற்போது நடந்து வருகிறது.கடந்த 15 ஆண்டுகளாக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி மாயக்கா தேவி கோவிலுக்கு தொடர்ந்து வந்து சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்தாண்டு மராட்டியத்தை சேர்ந்தவரின் மனைவிக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சுவாசக்கோளாறு பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் தனது வீட்டில் வைத்து செயற்கை சுவாசம் பெற்று வந்தார்.இந்தநிலையில் அவர் இந்தாண்டு மாயக்கா தேவி அம்மனை தரிசிக்க முடியாதோ என கணவரிடம் கவலையுடன் சொல்லி வந்துள்ளார். இது பற்றி அவர் டாக்டர்களிடம் கூறினார். அவர்களும் சில ஆலோசனைகளைச் சொல்லி அனுப்பி வைத்துள்ளனர். அதன்படி ஆக்சிஜன் சிலிண்டருடன் மனைவியை அழைத்து கொண்டு சாமி தரிசனம் செய்ய அந்த விவசாயி பெலகாவிக்கு வந்தார்.பின்னர் மாயக்கா தேவி கோவிலுக்கு சென்று தம்பதி இருவரும் சாமி தரிசனம் செய்துள்ளனர். மனைவி சுவாசிக்க உதவியாக ஆக்சிஜன் சிலிண்டரை, மனைவி செல்லும் இடத்துக்கு எல்லாம் அந்த விவசாயி தூக்கிச்சென்றார். இதனை பார்த்த பக்தர்களும், அங்கிருந்தவர்களும் நெகிழ்ச்சி அடைந்தனர்.மேலும் இதனை அங்கிருந்தவர்களில் சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பலரின் ‘லைக்குகளை அள்ளி வருகிறது. முதுமையிலும் கரம்பிடித்தவளின் ஆசையை நிறைவேற்றுவதே கடமை, அது ஒரு தனி சுகம் சிலிண்டரை சுமந்து வந்த அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

கடலுக்கு அடியில் ஆசியாவின் மிகப்பெரிய தங்க படிமம் சீனா கண்டுபிடிப்பு
உலகம்

கடலுக்கு அடியில் ஆசியாவின் மிகப்பெரிய தங்க படிமம் சீனா கண்டுபிடிப்பு

By news team
18 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசு தீவிர பரிசீலனை
உள்நாடு

18 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசு தீவிர பரிசீலனை

By news team
வெடிகுண்டு அச்சுறுத்தலால் கண்டி மாவட்ட செயலகத்தில் தீவிர சோதனை
உள்நாடு

வெடிகுண்டு அச்சுறுத்தலால் கண்டி மாவட்ட செயலகத்தில் தீவிர சோதனை

By news team
யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்பாக தையிட்டி விகாரை எதிர்ப்பு போராட்டம்
உள்நாடு

யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்பாக தையிட்டி விகாரை எதிர்ப்பு போராட்டம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?