By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

ஈரான் நோக்கி அமெரிக்க போர்க்கப்பல்கள் – ஹவுதி தாக்குதல் மிரட்டல்

news team
Last updated: January 27, 2026 6:00 am
By news team
Share
1 Min Read
ஈரான் நோக்கி அமெரிக்க போர்க்கப்பல்கள் – ஹவுதி தாக்குதல் மிரட்டல்
SHARE

ஈரானில் சுமார் ஒரு மாதமாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறை அதிகரித்து வருகிறது. இந்த போராட்டக்காரர்களை அரசு இரும்புக்கரம் கொண்டும் ஒடுக்கி வருகிறது.இரு தரப்புக்கும் இடையே நடந்து வரும் மோதலில் சுமார் 6 ஆயிரம் பேர் இதுவரை கொல்லப்பட்டு உள்ளதாக அமெரிக்க மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது. 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதுவரை கைது செய்யப்பட்டும் உள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு கூட்டாக மரண தண்டனை நிறைவேற்ற அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதற்கு பதிலடி கொடுத்த ஈரானும், அமெரிக்கா தாக்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என எச்சரித்தது. இந்த நிலையில் ஈரானை நோக்கி அமெரிக்கா தனது படைகளை நகர்த்தி வருகிறது. அமெரிக்காவின் விமானந்தாங்கி போர்க்கப்பலான ஆபிரகாம் லிங்கள் மற்றும் பிற போர்க்கப்பல்கள் ஈரானை நோக்கி விரைகின்றன.அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு தற்போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எதிர்வினையாற்றி உள்ளனர். செங்கடலில் ஈரானை நோக்கி வரும் அமெரிக்க போர்க்கப்பல்களை தாக்குவோம் என மிரட்டல் விடுத்து உள்ளனர். இதனால் அங்கு போர்பதற்றம் அதிகரித்துள்ளது.

TAGGED:americaIranmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

சுகாதார விதிமுறைகள் மீறல்: புத்தாண்டு கால சோதனைகளில் 400க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை
உள்நாடு

சுகாதார விதிமுறைகள் மீறல்: புத்தாண்டு கால சோதனைகளில் 400க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

By news team
யாழ் நகரில் கோர விபத்து: அறுவர் வைத்தியசாலையில் அனுமதி
உள்நாடு

யாழ் நகரில் கோர விபத்து: அறுவர் வைத்தியசாலையில் அனுமதி

By news team
பாடசாலை ஆசிரியர் வீட்டில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு – 3 பேர் கைது
உள்நாடு

பாடசாலை ஆசிரியர் வீட்டில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு – 3 பேர் கைது

By news team
ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்து தடையை நீக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்
உலகம்

ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்து தடையை நீக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?