By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

வீட்டுப்பணிக்கு சென்ற சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் – 37 வயது நபர் கைது

news team
Last updated: January 25, 2026 10:05 pm
By news team
Share
1 Min Read
வீட்டுப்பணிக்கு சென்ற சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் – 37 வயது நபர் கைது
SHARE

வீட்டுப்பணிப் பெண்ணாக சென்ற சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.கடந்த 2026.01.18 அன்று கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.இதன்போது மலையக பகுதியை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது கல்முனை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.கடந்த 2026.01.15 அன்று குறித்த வீட்டில் பணிப்பெண்ணாக செயற்பட்ட போது இரவு தன்னை குறித்த சந்தேகநபர் அழைத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக சிறுமி வாக்குமூலம் ஒன்றினை வழங்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் அறிவுறுத்தலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TAGGED:child abusemuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

உத்தரப் பிரதேசம்: பக்கோடா வாங்கச் சென்ற கணவன் – திரும்பியபோது மனைவி மாயம்
இந்தியா

உத்தரப் பிரதேசம்: பக்கோடா வாங்கச் சென்ற கணவன் – திரும்பியபோது மனைவி மாயம்

By news team
இலங்கையில் சிமெந்து விலை உயர்வு – மூட்டைக்கு ரூ.175 வரை அதிகரிப்பு
உள்நாடு

இலங்கையில் சிமெந்து விலை உயர்வு – மூட்டைக்கு ரூ.175 வரை அதிகரிப்பு

By news team
அடுத்த 10 ஆண்டுகளில் சந்திரனில் அணு மின் நிலையம் – ரஷ்யா திட்டம்
உலகம்

அடுத்த 10 ஆண்டுகளில் சந்திரனில் அணு மின் நிலையம் – ரஷ்யா திட்டம்

By news team
மாத்தறை வரல்ல பகுதியில் 7 வயது பாடசாலை மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
உள்நாடு

மாத்தறை வரல்ல பகுதியில் 7 வயது பாடசாலை மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?