By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Feb 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தால் கனடா பொருட்களுக்கு 100% வரி – ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

news team
Last updated: January 25, 2026 7:02 am
By news team
Share
1 Min Read
சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தால் கனடா பொருட்களுக்கு 100% வரி – ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
SHARE

சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனடியப் பொருட்களுக்கு 100% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கனடா சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால், அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து கனேடியப் பொருட்கள் மற்றும் தயாரிப்புகள் மீது உடனடியாக 100% வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.எவ்வாறாயினும் எந்த ஒப்பந்தம் என்பது குறித்து அவர் எவ்வித தகவல்களையும் வௌிப்படுத்தவில்லை.கடந்த வாரம், கனடா பிரதமர் கார்னி சீனாவுடன் ஒரு “மூலோபாய கூட்டாண்மையை அறிவித்ததோடு, வர்த்தக வரிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டார். அந்த நேரத்தில், ட்ரம்ப் இந்த நடவடிக்கையை “ஒரு நல்ல விஷயம்” என்று அழைத்தார். ஆனால், சமீப நாட்களாக அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸில் ஆற்றிய உரையில், அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கு சிதைந்துவிட்டதாக பிரதமர் கார்னி கூறியதே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.அத்துடன் பெரிய வல்லரசுகளின்” பொருளாதாரக் கட்டுப்படுத்தலுக்கு எதிராக மற்றைய நடுத்தர நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் கார்னி வலியுறுத்தினார். அவர் ட்ரம்ப்பின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், இது அமெரிக்காவை நோக்கியே கருதப்பட்டது. இதற்கு அடுத்த நாள் தனது உரையில் பதிலளித்த ட்ரம்ப், அமெரிக்காவால் தான் கனடா பிழைத்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.மேலும், தனது புதிய ‘அமைதி ஒப்பந்தத்தில் சேர கனடாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பையும் அமெரிக்க ஜனாதிபதி திரும்பப் பெற்றார்.சீனப் பொருட்களை அமெரிக்காவிற்குள் அனுப்புவதற்கான ஒரு இறங்குத் துறையாக கனடாவை மாற்ற முடியும் என்று கார்னி நினைத்தால், அது முற்றிலும் தவறான விடயமாகும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

TAGGED:canadaDonald Trumpmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு; அதிகாரிகளுடன் சந்திப்பு ரத்து – ட்ரம்ப் அறிவிப்பு
உலகம்

ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு; அதிகாரிகளுடன் சந்திப்பு ரத்து – ட்ரம்ப் அறிவிப்பு

By news team
யாழ் நகரில் கோர விபத்து: அறுவர் வைத்தியசாலையில் அனுமதி
உள்நாடு

யாழ் நகரில் கோர விபத்து: அறுவர் வைத்தியசாலையில் அனுமதி

By news team
அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு சம்பவம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்
உள்நாடு

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு சம்பவம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்

By news team
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிறுமி உயிரிழப்பு – மருத்துவமனை தவறு என மக்கள் குற்றச்சாட்டு
உள்நாடு

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிறுமி உயிரிழப்பு – மருத்துவமனை தவறு என மக்கள் குற்றச்சாட்டு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?