By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

ஊர்காவற்றுறை–யாழ்ப்பாணம் பேருந்து சாரதி மதுபோதையில் ஓட்டியதாக கைது

news team
Last updated: January 5, 2026 9:00 am
By news team
Share
1 Min Read
ஊர்காவற்றுறை–யாழ்ப்பாணம் பேருந்து சாரதி மதுபோதையில் ஓட்டியதாக கைது
SHARE

ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் பகுதிகளுக்கு இடையே சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மதுபோதையில் பேருந்தை செலுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் நேற்று (4) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதானது யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியின் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் இடையிலான சேவையை முன்னெடுக்கும் வழித்தடம் 777 இலக்க பேருந்தை செலுத்திச் சென்ற சாரதியே குறித்த சம்பவத்தின் போது கைதாகியுள்ளார்.அதிகளவான பயணிகளுடன் நேற்று மாலை 4 மணியளவில் குறித்த அரச பேருந்து அதி வேகத்தில் பயணிப்பதை அவதானித்த ஊர்காவற்றுறை போக்குவரத்து பொறுப்பதிகாரி சமன் குமார தலைமையிலான பொலிஸ் குழுவினர் பேருந்தை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர். சோதனையின் போது சாரதியிடம் சாரதி அனுமதிப் பத்திரம் இருந்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.அந்த சந்தர்ப்பத்தில் அவர் மது அருந்தியிருந்ததாக கூறப்படுகின்றது.
இதனை அடுத்து சாரதியை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை மற்றும் மது போதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட காரணங்களுக்காக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

TAGGED:arrestmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

50 கோடி ரூபா மதிப்பிலான ஐஸ், ஹெரோயின் பறிமுதல் – பெண் உட்பட 4 பேர் கைது
உள்நாடு

50 கோடி ரூபா மதிப்பிலான ஐஸ், ஹெரோயின் பறிமுதல் – பெண் உட்பட 4 பேர் கைது

By news team
களுத்துறையில் நள்ளிரவு திருட்டு: சிசிடிவி ஆதாரத்தில் 3 சிறுமிகள் கைது
உள்நாடு

களுத்துறையில் நள்ளிரவு திருட்டு: சிசிடிவி ஆதாரத்தில் 3 சிறுமிகள் கைது

By news team
கேகாலையில் O/L பரீட்சை எழுதவிருந்த 16 வயது மாணவிக்கு பிறந்த குழந்தை – பொலிஸ் விசாரணை
உள்நாடு

கேகாலையில் O/L பரீட்சை எழுதவிருந்த 16 வயது மாணவிக்கு பிறந்த குழந்தை – பொலிஸ் விசாரணை

By news team
ஈரானிடம் இருந்து எண்ணெய் கிடைக்காவிட்டாலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – ரணில் விக்ரமசிங்க விளக்கம்
உள்நாடு

ஈரானிடம் இருந்து எண்ணெய் கிடைக்காவிட்டாலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – ரணில் விக்ரமசிங்க விளக்கம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?