By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

One Galle Face உணவகத்தில் தண்ணீருக்கு பதில் செனிடைசர் – கைது செய்யப்பட்ட பணியாளர் பிணையில் விடுதலை

news team
Last updated: December 25, 2025 10:16 am
By news team
Share
1 Min Read
One Galle Face உணவகத்தில் தண்ணீருக்கு பதில் செனிடைசர் – கைது செய்யப்பட்ட பணியாளர் பிணையில் விடுதலை
SHARE

கொழும்பிலுள்ள One Galle Face இல் அமைந்துள்ள உணவகத்தில் தண்ணீர் போத்தல் கேட்டபோது செனிடைசர் போத்தல் வழங்கிய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பணியாளர் ஒருவரை பிணையில் விடுவிக்க கொழும்பு கூடுதல் நீதவான் லஹிரு சில்வா நேற்று உத்தரவிட்டார்.டி.பி. ரத்னவீர என்ற நபர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பணியாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.சந்தேக நபரை 200,000 ரூபாய் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், வழக்கை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.முறைப்பாட்டிற்கமைய, முன்னிலையான கோட்டை பொலிஸ் அதிகாரிகள் ஆதாரங்களை முன்வைத்துள்ளனர்.கடந்த 15 ஆம் திகதி ரத்னவீர என்ற முறைப்பாட்டாளர் தனது கர்ப்பிணி மனைவி, ஒன்றரை வயது குழந்தை மற்றும் அவரது மனைவியின் சகோதரியுடன் இரவு உணவு சாப்பிட உணவகத்திற்குச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.ரத்னவீர தண்ணீர் போத்தல் கேட்டதாகவும், சந்தேக நபர் தண்ணீர் போத்தலுக்கு பதிலாக செனிடைசர் போத்தலை கொண்டு வந்து கோப்பையில் ஊற்றியதாகவும் ரத்னவீர அதை குடித்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்த முறைப்பாட்டின் வழக்கறிஞர் புலஸ்தி ரணவீர தெரிவித்துள்ளார்.இதனால் தனது கட்சிக்காரர் கொள்ளுப்பிட்டியில் உள்ள டர்டன்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருந்தது எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.சந்தேக நபர் ரத்னவீரவுக்கு வழங்கியதாக கூறப்படும் செனிடைசர் கொண்ட போத்தலை ஆய்விற்காக அரச ஆய்வாளரிடம் அனுப்பியுள்ளதாக கோட்டை பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து பெப்ரவரி 6ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு நீதிபதி கோட்டை பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

TAGGED:muthalvanSri Lanka Policetamilnewswater
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தம்பதியினர் கைது
உள்நாடு

பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தம்பதியினர் கைது

By news team
பிலியந்தலையில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் 11ஆம் தர மாணவன் உயிரிழப்பு
உள்நாடு

பிலியந்தலையில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் 11ஆம் தர மாணவன் உயிரிழப்பு

By news team
பலாங்கொடயில் நத்தார் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்யும் போது கால்வாயில் விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு
உள்நாடு

பலாங்கொடயில் நத்தார் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்யும் போது கால்வாயில் விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

By news team
உத்தரப் பிரதேசம்: பக்கோடா வாங்கச் சென்ற கணவன் – திரும்பியபோது மனைவி மாயம்
இந்தியா

உத்தரப் பிரதேசம்: பக்கோடா வாங்கச் சென்ற கணவன் – திரும்பியபோது மனைவி மாயம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?