By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Feb 20, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

2026-ல் பாடசாலை நேரம் நீட்டிக்கப்படாது – கல்வி அமைச்சு

news team
Last updated: January 2, 2026 4:56 am
By news team
Share
2 Min Read
2026-ல் பாடசாலை நேரம் நீட்டிக்கப்படாது – கல்வி அமைச்சு
SHARE

பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,

*2026 ஆம் ஆண்டில் 5 – 13 வரையான தரங்களுக்கான பாடசாலை நேரம் மு.ப 7.30 முதல் பி.ப 1.30 வரை மாற்றமின்றி தொடரும்.

*அரச, அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்கள் 2026 ஆம் ஆண்டின் முதலாம் தவணைக்காக ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

*தரம் 6 முதல் தரம் 13 வரை ஒரு நாளுக்கான பாடவேளைகளின் எண்ணிக்கை 7 ஆகும்.

*ஒரு பாடவேளைக்காக 45 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.

*2026 ஆம் ஆண்டில் கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடு தரம் 1 மற்றும் தரம் 6 இற்கு நடைமுறைப்படுத்தப்படும்.

*கல்வி மறுசீரமைப்புச் செயற்பாட்டின் கீழ், தரம் 6 இற்கான கல்வி நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக 2026 ஜனவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

*தரம் 1 இற்கான மாணவர்களை அறிமுகப்படுத்தும் செயற்பாடு 2026 ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாவதுடன், உத்தியோகபூர்வமாக கல்வி நடவடிக்கைகள் 2026 ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பமாகும்.

*தரம் 1 இற்குரிய செயற்பாட்டு புத்தகங்கள் மற்றும் தரம் 6 இற்குரிய கற்றல் தொகுதிகள் (Learning Modules), அந்தத் தரங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்கி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

*ஏனைய தரங்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள் இதுவரையில் விநியோகித்து முடிக்கப்பட்டுள்ளன.

*2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி 2026 ஜனவரி 12 முதல் 20 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.

*இது தொடர்பான விரிவான சுற்றுநிருபம் 2026 ஜனவரி 2 ஆம் திகதி வெளியிடப்படும்.

TAGGED:muthalvanschools timeSri Lankan Schoolstamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இன்றைய ராசி பலன் 23 டிசம்பர் 2025
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 23 டிசம்பர் 2025

By news team
ஈரான் தொடர்பான அமெரிக்க வர்த்தகத் தீர்மானம் – இலங்கை ஏற்றுமதிக்கு அபாய எச்சரிக்கை
உள்நாடு

ஈரான் தொடர்பான அமெரிக்க வர்த்தகத் தீர்மானம் – இலங்கை ஏற்றுமதிக்கு அபாய எச்சரிக்கை

By news team
எரிபொருள் நெருக்கடியால் கியூபா முடங்கும் அபாயம் அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை
உலகம்

எரிபொருள் நெருக்கடியால் கியூபா முடங்கும் அபாயம் அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

By news team
யாழ் நகரில் கோர விபத்து: அறுவர் வைத்தியசாலையில் அனுமதி
உள்நாடு

யாழ் நகரில் கோர விபத்து: அறுவர் வைத்தியசாலையில் அனுமதி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?