By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

13.2 பில்லியன் ரூபா மோசடி: NDB வங்கி சம்பவத்தில் சர்வதேச விசாரணை ஆரம்பம்

news team
Last updated: April 14, 2026 9:37 am
By news team
Share
1 Min Read
13.2 பில்லியன் ரூபா மோசடி: NDB வங்கி சம்பவத்தில் சர்வதேச விசாரணை ஆரம்பம்
SHARE

என்.டி.பி. வங்கியின் தரவுக் கட்டமைப்புக்குள் ஊடுருவி 13.2 பில்லியன் ரூபா நிதியை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் விரிவான விசாரணைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த மோசடியில் மெய்நிகர் பணம்பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அது குறித்து விசாரணை நடத்த சர்வதேச பொலிஸாரின் விசேட நிபுணர் குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளது. பிரான்ஸின் லியோன் நகரில் உள்ள சர்வதேச பொலிஸ் தலைமையகத்திடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்தப் பாரிய மோசடி தொடர்பாக இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களில் வங்கியின் தலைமையகத்திலுள்ள கொடுப்பனவு தீர்வைப் பிரிவின் உதவி முகாமையாளர் மற்றும் அவரது சகோதரரும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த நிதி மோசடியினால் வங்கியின் எந்தவொரு வாடிக்கையாளரின் கணக்கு மீதிகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று என்.டி.பி. வங்கி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. வங்கியின் வழமையான செயற்பாடுகள் மற்றும் சேவைகள் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதேவேளை, என்.டி.பி. வங்கியின் மூலதன அளவு மற்றும் நிதி திரவத்தன்மை தொடர்பான விகிதங்கள், இலங்கை மத்திய வங்கியின் குறைந்தபட்ச ஒழுங்குமுறைத் தேவைகளை விடவும் அதிக மட்டத்திலேயே காணப்படுகின்றன. எனவே, வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை குறித்து அச்சமடையத் தேவையில்லை என்று மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

TAGGED:muthalvanNDB Bankscamtamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

மட்டக்களப்பில் பெண்களை கடத்தி நகை கொள்ளை – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்
உள்நாடு

மட்டக்களப்பில் பெண்களை கடத்தி நகை கொள்ளை – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

By news team
இலங்கையில் எரிபொருள் கையிருப்பு குறித்து புதிய தகவல் – உலக சந்தையில் விலை உயர்வு சாத்தியம்
உள்நாடு

இலங்கையில் எரிபொருள் கையிருப்பு குறித்து புதிய தகவல் – உலக சந்தையில் விலை உயர்வு சாத்தியம்

By news team
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2017 முதல் திட்டமிடப்பட்டது – பாராளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல்
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2017 முதல் திட்டமிடப்பட்டது – பாராளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல்

By news team
கிரிந்த போதைப்பொருள் வழக்கு: தகவல் தருநரை கொலை செய்ய ஒப்பந்தம் – வாடகை கொலையாளி கைது
உள்நாடு

கிரிந்த போதைப்பொருள் வழக்கு: தகவல் தருநரை கொலை செய்ய ஒப்பந்தம் – வாடகை கொலையாளி கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?