By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

வைத்தியசாலையில் அலட்சியத்தால் தாயும் சிசுவும் மரணம் என குடும்பத்தினர் குற்றச்சாட்டு

news team
Last updated: June 10, 2026 9:25 am
By news team
Share
1 Min Read
வைத்தியசாலையில் அலட்சியத்தால் தாயும் சிசுவும் மரணம் என குடும்பத்தினர் குற்றச்சாட்டு
SHARE

மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாயும் அவரின் பிறந்த பெண் சிசுவும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.ஹசலக, மினிப்பே பகுதியை சேர்ந்த 42 வயதுடைய எச். எம். ஸ்வர்ணமலா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் ஆடைத் தொழிற்சாலை ஊழியராகப் பணிபுரிந்துள்ளார்.மூன்றாவது பிரசவத்திற்காக கடந்த 25 ஆம் திகதி மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அவர், அனுமதிக்கப்பட்டார். 26 ஆம் திகதி முற்பகல் 11.00 மணியளவில் பெண் குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளார்.சிசேரியன் மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்ட பின்னர், தாயின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது. உடனடியாக அவர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 06 ஆம் திகதி அதிகாலை 5.45 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார்.மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் அலட்சியப் போக்கினாலேயே இந்த 2 மரணங்களும் சம்பவித்துள்ளதாக உயிரிழந்த பெண்ணின் கணவரான சுமித் பண்டார உள்ளிட்ட உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.உயிரிழந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை வழமைக்கு மாறாக அதிக வளர்ச்சியடைந்திருந்ததால் அவருக்கு ஆரம்பத்தில் சிகிச்சையளித்த மருத்துவர்கள் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலமே பிரசவத்தை மேற்கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்திருந்தனர்.அவ்வாறிருந்தும், அவர் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அங்குள்ள மருத்துவர்கள் சாதாரண பிரசவமாக அதனை மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.சாதாரண பிரசவ முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, இறுதித் தருணத்திலேயே சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.இதன் காரணமாகவே குழந்தை உயிரிழந்ததாகவும், வைத்தியர்களின் அலட்சியத்தாலேயே இந்த இரண்டு மரணங்களும் நிகழ்ந்துள்ளதாகவும் உறவினர்கள் கடுமையாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

TAGGED:deathHospitals in Sri Lankamuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

டெல்லி உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழப்பு
இந்தியா

டெல்லி உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

By news team
மாத்தறை ஹக்மனையில் ஆடையகத்தில் நூதன திருட்டு – 50,000 ரூபாய் பெறுமதியான 15 ஆடைகள் அபகரிப்பு
உள்நாடு

மாத்தறை ஹக்மனையில் ஆடையகத்தில் நூதன திருட்டு – 50,000 ரூபாய் பெறுமதியான 15 ஆடைகள் அபகரிப்பு

By news team
மு.க. ஸ்டாலின் 89,000 இலங்கையர்களுக்கு குடியுரிமை கோரிக்கை – நாமல் ராஜபக்ஷ வரவேற்பு
உள்நாடு

மு.க. ஸ்டாலின் 89,000 இலங்கையர்களுக்கு குடியுரிமை கோரிக்கை – நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

By news team
வீட்டுப்பணிக்கு சென்ற சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் – 37 வயது நபர் கைது
உள்நாடு

வீட்டுப்பணிக்கு சென்ற சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் – 37 வயது நபர் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?