By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Feb 20, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

வெள்ள நிவாரண கொடுப்பனவில் பாரபட்சம் – வவுனியா சூடுவெந்தபுலவு கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

news team
Last updated: December 25, 2025 5:57 am
By news team
Share
1 Min Read
வெள்ள நிவாரண கொடுப்பனவில் பாரபட்சம் – வவுனியா சூடுவெந்தபுலவு கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
SHARE

வெள்ள நிவாரண கொடுப்பனவில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து வவுனியா, சூடுவெந்தபுலவு கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.வவுனியா, சூடுவெந்தபுலவு கிராம அலுவலர் அலுவலகம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (24.12.2025) மாலை முன்னெடுக்கப்பட்டது.வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட 25,000 ரூபா கொடுப்பனவினை பாதிக்கப்படாதவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட பலருக்கு குறித்த கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுத்தி உத்தியோகத்தர்களுக்கு எதிராக பதாதைகளை தாங்கி இருந்ததோடு கோசங்களையும் எழுப்பி இருந்தனர்.அத்துடன், ஊழலை ஒழிப்பதாக கூறிய அரசாங்கத்திற்கு நாம் வாக்களித்தோம். முன்னைய காலங்களைப் போல் அல்லாமல் பாரபட்சமற்ற முறையில் குறித்த நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை முன் வைத்திருந்தனர்.இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 பேர் வரையில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

TAGGED:Floods In Sri Lankamuthalvantamilnewsvavuniya
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

மு.க. ஸ்டாலின் 89,000 இலங்கையர்களுக்கு குடியுரிமை கோரிக்கை – நாமல் ராஜபக்ஷ வரவேற்பு
உள்நாடு

மு.க. ஸ்டாலின் 89,000 இலங்கையர்களுக்கு குடியுரிமை கோரிக்கை – நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

By news team
இலங்கைக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கை இன்று சந்திப்பு
உள்நாடு

இலங்கைக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கை இன்று சந்திப்பு

By news team
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் 25 ஆண்டுகளாக இயங்கும் மதுபானசாலை மூடக் கோரி ஆர்ப்பாட்டம்
உள்நாடு

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் 25 ஆண்டுகளாக இயங்கும் மதுபானசாலை மூடக் கோரி ஆர்ப்பாட்டம்

By news team
ஜெர்மன் சுற்றுலா பயணியிடம் பாலியல் துன்புறுத்தல்: பதுளையில் முச்சக்கர சாரதி கைது
உள்நாடு

ஜெர்மன் சுற்றுலா பயணியிடம் பாலியல் துன்புறுத்தல்: பதுளையில் முச்சக்கர சாரதி கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?