By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
சினிமா

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’: புதிய போஸ்டர் வெளியாகியது

news team
Last updated: January 1, 2026 3:18 am
By news team
Share
1 Min Read
விஜய் நடித்த ‘ஜனநாயகன்’: புதிய போஸ்டர் வெளியாகியது
SHARE

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் எச்.வினோத். தற்போது இவர் விஜய்யை வைத்து ’ஜனநாயகன்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்து பொங்கல் வெளியீடாக ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது.இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர். தீவிர அரசியலில் களமிறங்கி இருக்கும் விஜய் நடிக்கும் கடைசி படம் இதுதான் என்று கூறப்படுகிறது. இதனால் படத்துக்கு சினிமா தாண்டி அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமான விஜய் படம் போன்று இல்லாமல், இந்த படத்தில் அரசியல் நெடி அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இதற்கிடையில், இப்படத்திலிருந்து “தளபதி கச்சேரி”, “ஒரு பேரே வரலாறு” , “செல்ல மகளே” ஆகிய 3 பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றன. இந்த சூழலில் ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் நடைபெற்றது.இந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பதிவில், “நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லாரும் நல்லா இருப்போம். இனிய புத்தாண்டு நண்பா.. நண்பி..” என்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

TAGGED:muthalvantamilnewsvijay
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

மட்டக்களப்பு பகுதியில் மதுபான பணம் தராத ஆத்திரத்தில் தாயை தள்ளி கொலை செய்த 19 வயது இளைஞன் கைது
உள்நாடு

மட்டக்களப்பு பகுதியில் மதுபான பணம் தராத ஆத்திரத்தில் தாயை தள்ளி கொலை செய்த 19 வயது இளைஞன் கைது

By news team
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2017 முதல் திட்டமிடப்பட்டது – பாராளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல்
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2017 முதல் திட்டமிடப்பட்டது – பாராளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல்

By news team
குவைத் கடற்பரப்பில் எண்ணெய் தாங்கி கப்பல் மீது தாக்குதல் ;கடல் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்
உலகம்

குவைத் கடற்பரப்பில் எண்ணெய் தாங்கி கப்பல் மீது தாக்குதல் ;கடல் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்

By news team
இலங்கையில் மின்சாரக் கட்டண முறையில் பெரிய மாற்றம் – ஆண்டுக்கு ஒருமுறை திருத்தம் செய்ய Mஎரிசக்தி அமைச்சு நடவடிக்கை
உள்நாடு

இலங்கையில் மின்சாரக் கட்டண முறையில் பெரிய மாற்றம் – ஆண்டுக்கு ஒருமுறை திருத்தம் செய்ய எரிசக்தி அமைச்சு நடவடிக்கை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?