By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Feb 20, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

ரூ.6 இலட்சம் பெறுமதியான அலங்கார மலர்ச் செடிகளுடன் இலங்கை பயணி கைது

news team
Last updated: February 10, 2026 11:29 am
By news team
Share
1 Min Read
ரூ.6 இலட்சம் பெறுமதியான அலங்கார மலர்ச் செடிகளுடன் இலங்கை பயணி கைது
SHARE

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான அலங்கார மலர்ச் செடிகளுடன் இலங்கை பயணி ஒருவர் இன்று (10) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.சுங்கத் திணைக்களத்தின் உயிர்ப்பல்வகைமை, கலாசார மற்றும் தேசிய மரபுரிமைகள் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இணைந்து இந்தச் சோதனையை முன்னெடுத்தனர். கைது செய்யப்பட்டவர், நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.இன்று அதிகாலை 12.35 மணிக்கு தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தாய் ஏர்வேஸின் TG-307 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.அவர் கொண்டு வந்த 3 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 386 அலங்கார மலர்ச் செடிகள் கைப்பற்றப்பட்டன.பிலோடென்ட்ரான் (Philodendron), அக்லோனிமா (Aglaonema), அலோகாசியா (Alocasia) மற்றும் மொன்ஸ்டெரா (Monstera) ஆகிய அரிய வகைச் செடிகள் இதில் அடங்கியுள்ளன.கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TAGGED:arrestmuthalvanSri Lanka Policetamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

உத்தரகாண்ட் மாநில அரசு பள்ளிகளில் பகவத் கீதா வாசிக்க கட்டாயம்
இந்தியா

உத்தரகாண்ட் மாநில அரசு பள்ளிகளில் பகவத் கீதா வாசிக்க கட்டாயம்

By news team
நாட்டின் பல இடங்களில் பிற்பகலில் மழை பெய்யும் சாத்தியம்
உள்நாடு

நாட்டின் பல இடங்களில் பிற்பகலில் மழை பெய்யும் சாத்தியம்

By news team
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாளை முதல் 27 வரை விசேட மேலதிக பேருந்து சேவைகள்
உள்நாடு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாளை முதல் 27 வரை விசேட மேலதிக பேருந்து சேவைகள்

By news team
அமெரிக்காவில் போக்குவரத்து நெரிசல் வீதியில் அவசரமாகத் தரையிறங்கிய சிறிய விமானம்
உலகம்

அமெரிக்காவில் போக்குவரத்து நெரிசல் வீதியில் அவசரமாகத் தரையிறங்கிய சிறிய விமானம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?