By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Feb 20, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

ரஷ்யாவில் படித்த மாணவனை வைத்திய பீடத்தில் சேர்க்க நீதிமன்ற உத்தரவு

news team
Last updated: February 6, 2026 11:31 am
By news team
Share
1 Min Read
ரஷ்யாவில் படித்த மாணவனை வைத்திய பீடத்தில் சேர்க்க நீதிமன்ற உத்தரவு
SHARE

ரஷ்யாவில் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து இலங்கையில் மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகுவதற்கான தகுதியைப் பெற்றிருந்த இலங்கை மாணவன் ஒருவரை, உள்நாட்டு மருத்துவ பீடத்தில் இணைத்துக்கொள்வதை மறுத்ததன் ஊடாக அவரது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அத்துடன், குறித்த மாணவனை உடனடியாக இலங்கைப் பல்கலைக்கழகம் ஒன்றின் மருத்துவ பீடத்தில் இணைத்துக்கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.பொரளையைச் சேர்ந்த இசுல தம்சித் ஜயரத்ன என்ற மாணவரே இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரணை செய்த பின்னர், நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் சோபித ராஜகருணா ஆகியோரின் இணக்கப்பாட்டுடன், உயர் நீதிமன்ற நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர இத்தீர்ப்பை அறிவித்துள்ளார். தான் கொழும்பிலுள்ள முன்னணி பாடசாலையொன்றில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்ததாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். தனது தந்தை இலங்கை விமானப்படையின் குரூப் கெப்டனாக கடமையாற்றிய போது, ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பதவி கிடைத்ததை அடுத்து தான் ரஷ்யாவிற்குச் சென்றதாக அவர் தெரிவித்தார்.அங்கு இந்திய, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலையில் ‘சிரேஷ்ட பாடசாலை சான்றிதழ் பரீட்சையில்’ சித்தியடைந்ததாகவும், அது இலங்கையின் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குச் சமமானது எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டினார்.அதன் பின்னர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஊடாக இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடத்தில் அனுமதி பெறுவதற்காக விண்ணப்பித்த போதிலும், அதற்கான நிபந்தனைகளுக்குத் தான் பொருந்தவில்லை எனக் கூறி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தனது விண்ணப்பத்தை நிராகரித்ததாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார். இதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதியரசர், அரச பல்கலைக்கழகமொன்றின் வைத்திய பீடத்தில் அனுமதி பெறுவதற்கான உரிய நிபந்தனைகளின் கீழ் மனுதாரர் தகுதி பெற்றுள்ளதாகத் தீர்ப்பளித்தார்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

பொகவந்தலாவை காசல்ரி தோட்டத்தில் ஜனவரி மாத சம்பளம் 1,750 ரூபா நாள் சம்பளம் – மக்கள் மகிழ்ச்சி
உள்நாடு

பொகவந்தலாவை காசல்ரி தோட்டத்தில் ஜனவரி மாத சம்பளம் 1,750 ரூபா நாள் சம்பளம் – மக்கள் மகிழ்ச்சி

By news team
ஈரான் நோக்கி அமெரிக்க போர்க்கப்பல்கள் – ஹவுதி தாக்குதல் மிரட்டல்
உலகம்

ஈரான் நோக்கி அமெரிக்க போர்க்கப்பல்கள் – ஹவுதி தாக்குதல் மிரட்டல்

By news team
அமெரிக்க குடிமக்கள் மீது பயணத் தடை – மாலி, புர்கினா ஃபஸோ அரசுகள் அறிவிப்பு
உலகம்

அமெரிக்க குடிமக்கள் மீது பயணத் தடை – மாலி, புர்கினா ஃபஸோ அரசுகள் அறிவிப்பு

By news team
பயத்தில் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட நோயாளிகள்
உலகம்

ஆசன வாயில் வெடிகுண்டுடன் வந்த நபர் பயத்தில் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்ட நோயாளிகள்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?