By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

யாழ் போதனா மருத்துவமனை கண் சிகிச்சைக்காக தென் இலங்கையிலிருந்து நோயாளர்கள் வருகை – கூடுதல் வசதிகள் கோரிக்கை

news team
Last updated: March 9, 2026 11:17 am
By news team
Share
1 Min Read
யாழ் போதனா மருத்துவமனை கண் சிகிச்சைக்காக தென் இலங்கையிலிருந்து நோயாளர்கள் வருகை – கூடுதல் வசதிகள் கோரிக்கை
SHARE

காலி, மாத்தறை, கண்டி, மாத்தளை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும், யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு, கண் சிகிச்சைகளுக்காக பெருமளவானோர் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கண் நோயியல் பிரிவுக்கு, தென் பகுதிகளுக்கு வழங்கப்படும் வசதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தென் பகுதியிலிருந்து, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு, கண்நோய் தொடர்பில் சிகிச்சைகளுக்கு செல்லும் நோயாளர்களால், ஜனாதிபதிக்கு இந்த விடயம் தொடர்பில் கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கண் வெண்திறை நீக்கத்துக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறி, அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில், இதற்கான சத்திரசிகிச்சைகள் உரியமுறையில் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.கண் நோயியல் விசேட நிபுணர் எஸ்.மலரவன் தலைமையிலான மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட மருத்துவமனை பணியாளர்கள், தங்களுக்கான சிகிச்சைகளை உரியவாறு வழங்குவதாகவும், தென்பகுதி நோயாளர்கள் கூறியுள்ளனர்.அதேசமயம் தென் பகுதியில் அதிக செலவில் கண் நோய் தொடர்பான சிகிச்சைகள் வழங்கப்படுகின்ற போதிலும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் முற்றுமுழுதாக இலவச சேவைகள் வழங்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

TAGGED:Jaffna Teaching Hospitalmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் ஆரம்பம் – 2026ல் அறிமுகம்
உள்நாடு

இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் ஆரம்பம் – 2026ல் அறிமுகம்

By news team
தெரியாதவர்களிடம் இருந்து உணவு, பானம் ஏற்க வேண்டாம் – பொலிஸார் எச்சரிக்கை
உள்நாடு

தெரியாதவர்களிடம் இருந்து உணவு, பானம் ஏற்க வேண்டாம் – பொலிஸார் எச்சரிக்கை

By news team
அடகு வைத்த மோதிரங்களுக்குப் பதிலாக வேறு மோதிரங்கள்! ; நகைகளை மீட்க அரச வங்கிக்குச் சென்றவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
உள்நாடு

அட்டன் – டிக்கோயா பகுதியில் அரச வங்கியில் அடகு வைத்த மோதிரம் மாறியதாக குற்றச்சாட்டு

By news team
நாட்டின் பல இடங்களில் பிற்பகலில் மழை பெய்யும் சாத்தியம்
உள்நாடு

நாட்டின் பல இடங்களில் பிற்பகலில் மழை பெய்யும் சாத்தியம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?