By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

மே மாதத்தில் எரிபொருள் விலை கடுமையாக உயரும் அபாயம் – அமைச்சர் எச்சரிக்கை

news team
Last updated: March 22, 2026 7:59 pm
By news team
Share
1 Min Read
மே மாதத்தில் எரிபொருள் விலை கடுமையாக உயரும் அபாயம் – அமைச்சர் எச்சரிக்கை
SHARE

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்தால், எதிர்வரும் மே மாதத்தில் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.எனவே, எரிபொருள் பயன்பாட்டைத் தாமாகவே முன்வந்து மட்டுப்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாகத் தெளிவுபடுத்துவதற்காக இன்று (22) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாவும், ஒரு லீற்றர் பெட்ரோலுக்கு 20 ரூபாவும் சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.இது குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறுகையில்,உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை உயர்வு மற்றும் கப்பல்களுக்கான பாதுகாப்புச் செலவுகள் அதிகரித்துள்ளமை காரணமாக, இலங்கையின் எரிபொருள் விலையிலும் கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.எதிர்கால நிலைமை குறித்து யாராலும் எதிர்வுகூற முடியாது. இருப்பினும், அடிக்கடி விலை அதிகரிப்புகளைச் செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை.நிலைமை ஓரளவு சீராகும் என்பதே எமது நம்பிக்கை. ஒருவேளை அவ்வாறு சீராகாவிட்டால், மே மாதம் முதலாம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள விலைத்திருத்தத்தின் போது, மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிலான விலை அதிகரிப்பைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனத் தெரிவித்தார்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

புறக்கோட்டை பஸ் நிலையத்தில் சேதப்படுத்தும் நபர்களுக்கு கடும் நடவடிக்கை – போக்குவரத்து பிரதி அமைச்சர் எச்சரிக்கை
உள்நாடு

புறக்கோட்டை பஸ் நிலையத்தில் சேதப்படுத்தும் நபர்களுக்கு கடும் நடவடிக்கை – போக்குவரத்து பிரதி அமைச்சர் எச்சரிக்கை

By news team
அம்பாறையில் 800 லீற்றர் டீசல் பதுக்கல் – எரிபொருள் நிலைய ஊழியர் கைது
உள்நாடு

அம்பாறையில் 800 லீற்றர் டீசல் பதுக்கல் – எரிபொருள் நிலைய ஊழியர் கைது

By news team
கேகாலையில் மாமனார் கத்திக்குத்து: மருமகன் உயிரிழப்பு
உள்நாடு

கேகாலையில் மாமனார் கத்திக்குத்து: மருமகன் உயிரிழப்பு

By news team
நகை வாங்க வந்தவர் போல நடித்து சங்கிலி அபகரிப்பு – நீதிமன்ற உத்தரவால் விளக்கமறியல்
உள்நாடு

நகை வாங்க வந்தவர் போல நடித்து சங்கிலி அபகரிப்பு – நீதிமன்ற உத்தரவால் விளக்கமறியல்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?