மஹியங்கனை – கிராந்துருகோட்டே வீதியின் 3ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். நேற்று (27) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.கிராந்துருகோட்டே நோக்கி பயணித்த கெப் ரக வாகனமொன்று, மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த உழவு இயந்திரத்துடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் காயமடைந்த உழவு இயந்திரத்தின் சாரதி, கெப் வாகன சாரதி மற்றும் அதில் பயணித்த 7 பேர் உட்பட மொத்தம் 9 பேர் சிகிச்சைக்காக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண்ணும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்கள் மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 57 மற்றும் 44 வயதுடைய தம்பதியினர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மஹியங்கனை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
