By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Feb 20, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

பொலிஸ் கட்டளையை மீறி தப்பிச் சென்ற வேன்: துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி

news team
Last updated: February 10, 2026 8:05 am
By news team
Share
1 Min Read
பொலிஸ் கட்டளையை மீறி தப்பிச் சென்ற வேன்: துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி
SHARE

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று (10) அதிகாலை ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டிய போதிலும், அந்த வேன் பொலிஸாரின் கட்டளையை மீறி மண்டைதீவு திசை நோக்கிச் சென்றுள்ளது.அந்த நேரத்தில் மண்டைதீவு வீதித் தடையைப் பரிசோதித்துவிட்டு அல்லைப்பிட்டி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஜீப் வண்டிக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டது. அதற்கமைய, குறித்த ஜீப் வண்டி அந்த வேனை நிறுத்த முயற்சித்த போதிலும், அது தொடர்ந்தும் நிறுத்தாமல் தப்பிச் சென்றதால், பொலிஸார் வேனை நிறுத்துவதற்காக வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.அப்போதும் நிறுத்தாமல் தப்பிச் சென்ற வேனை நிறுத்துவதற்காகப் பொலிஸார் வேன் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அதன் சாரதி காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.இவ்வாறு உயிரிழந்தவர் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.குறித்த வேனின் பின் இருக்கைகள் கழற்றி அகற்றப்பட்டிருந்த நிலையில், வேனில் இருந்த மேலும் இருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸாரும் யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

TAGGED:deathmuthalvanSri Lanka Policetamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமையான மகனை தந்தையால் வெட்டிப் படுகொலை
உள்நாடு

போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமையான மகனை தந்தையால் வெட்டிப் படுகொலை

By news team
நாட்டின் பல இடங்களில் பிற்பகலில் மழை பெய்யும் சாத்தியம்
உள்நாடு

நாட்டின் பல இடங்களில் பிற்பகலில் மழை பெய்யும் சாத்தியம்

By news team
ரஷிய ராணுவ உயர் அதிகாரி மீது தாக்குதல் – மொஸ்கோ குண்டு வெடிப்பில் ஜெனரல் உயிரிழப்பு
உலகம்

ரஷிய ராணுவ உயர் அதிகாரி மீது தாக்குதல் – மொஸ்கோ குண்டு வெடிப்பில் ஜெனரல் உயிரிழப்பு

By news team
நீருக்கடியில் சதுரங்கப் போட்டி: உலக சாம்பியன் பட்டத்தை வென்ற நெதர்லாந்து
விளையாட்டு

நீருக்கடியில் சதுரங்கப் போட்டி: உலக சாம்பியன் பட்டத்தை வென்ற நெதர்லாந்து

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?