By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

பெஞ்சமின் நேதன்யாகு உயிருடன் – வதந்திக்கு பதிலாக வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர்

news team
Last updated: March 16, 2026 6:14 am
By news team
Share
1 Min Read
பெஞ்சமின் நேதன்யாகு உயிருடன் – வதந்திக்கு பதிலாக வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர்
SHARE

ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கொல்லப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.ஒரு சிற்றுண்டிச்சாலையில் கோப்பி அருந்தியபடி பேசிய அவர், “நான் செத்துக்கொண்டிருக்கிறேன்…கோப்பிக்காக” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். (இது எதன்பேரில் மிகுந்த விருப்பம் உள்ளதோ, அதற்காக உயிரையே விடுவேன் என்ற ஹீப்ரு மொழி வழக்கைக் குறிப்பதாகும்).மேலும், தனது விரல்களைக் கெமரா முன் காட்டிய அவர், முந்தைய ஊடக சந்திப்பில் தனக்கு ஆறு விரல்கள் இருந்ததாகக் கூறி அது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட காணொளி எனப் பரப்பப்பட்ட தகவல்களையும் மறுத்தார்.

இஸ்ரேலியப் பிரஜைகளுக்கு ஆற்றிய உரையில், ஈரான் மீது இஸ்ரேல் இன்றும் மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட நெதன்யாகு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அருகிலேயே இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.இதேவேளை, “குழந்தைகளைக் கொல்லும் இந்தக் குற்றவாளி உயிரோடு இருந்தால், எங்களின் முழுப் பலத்தையும் கொண்டு அவரைப் பின்தொடர்ந்து கொல்வோம்” என ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான போர் 16 ஆவது நாளை எட்டியுள்ளதுடன், இதுவரை ஈரானில் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

TAGGED:IranIran-Israel Warmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

மஹியங்கனையில் விபத்து – தம்பதியினர் உயிரிழப்பு, 9 பேர் காயம்
உள்நாடு

மஹியங்கனையில் விபத்து – தம்பதியினர் உயிரிழப்பு, 9 பேர் காயம்

By news team
ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்கும் ஒரு கப்பலுக்கு 2 மில்லியன் டொலர் வசூல் - ஈரான் அறிவிப்பு
உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்கும் ஒரு கப்பலுக்கு 2 மில்லியன் டொலர் வசூல் – ஈரான் அறிவிப்பு

By news team
விளான் சந்தியில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்: இருவர் வைத்தியசாலையில் அனுமதி
உள்நாடு

பெரியவிளான் சந்தியில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்: இருவர் வைத்தியசாலையில் அனுமதி

By news team
நிபா வைரஸ் குறித்து இலங்கையில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை – சுகாதார அமைச்சு
உள்நாடு

நிபா வைரஸ் குறித்து இலங்கையில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை – சுகாதார அமைச்சு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?