By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Feb 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

பிபிலையில் குடும்பத் தகராறில் தந்தை வெட்டிப் படுகொலை; மகன் கைது

news team
Last updated: January 4, 2026 10:37 am
By news team
Share
1 Min Read
பிபிலையில் குடும்பத் தகராறில் தந்தை வெட்டிப் படுகொலை; மகன் கைது
SHARE

மொனராகலை, பிபிலை பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் 25 வயதுடைய அவரின் மூத்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான மகன், யுவதி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந்தக் காதலுக்குத் தந்தை கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளார்.இந்தக் காதல் விவகாரம் தொடர்பில் நேற்று இரவு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.இதன்போது வீட்டில் மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் தந்தையை மகன் வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.மகனைக் கைது செய்துள்ள பொலிஸார், இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TAGGED:crimedeathmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ரஷிய ராணுவ உயர் அதிகாரி மீது தாக்குதல் – மொஸ்கோ குண்டு வெடிப்பில் ஜெனரல் உயிரிழப்பு
உலகம்

ரஷிய ராணுவ உயர் அதிகாரி மீது தாக்குதல் – மொஸ்கோ குண்டு வெடிப்பில் ஜெனரல் உயிரிழப்பு

By news team
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் காணி தகராறு – ஒருவர் கொலை, 3 பேர் தலைமறைவு
உள்நாடு

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் காணி தகராறு – ஒருவர் கொலை, 3 பேர் தலைமறைவு

By news team
கல்கிசை பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் தப்பியோட்டம் – மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்
உள்நாடு

கல்கிசை பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் தப்பியோட்டம் – மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

By news team
நாணய சந்தையில் அதிர்ச்சி – இலங்கை ரூபாய் விலை குறைவு
வணிகம்

நாணய சந்தையில் அதிர்ச்சி – இலங்கை ரூபாய் விலை குறைவு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?