By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

பல லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவன் – நேர்மையின் எடுத்துக்காட்டு

news team
Last updated: March 19, 2026 8:30 pm
By news team
Share
1 Min Read
பல லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவன் - நேர்மையின் எடுத்துக்காட்டு
SHARE

பேருந்தில் பயணம் செய்த போது தவறுதலாக மாறி வந்த பையிலிருந்த 10 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பணத்தை, உரியவரிடம் ஒப்படைத்த மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.11ஆம் தர மாணவன் ஒருவனே இவ்வாறு பணத்தை, உரியவரிடம் ஒப்படைத்து முன்மாதிரியாகச் செயற்பட்டுள்ளான்.தெல்கொட பகுதியிலிருந்து மாலம்பே மாதிரி ஆண்கள் பாடசாலைக்கு பேருந்தில் பயணித்த அகில தேசப்பிரிய என்ற மாணவனின் பாடசாலைப் பை, மற்றுமொரு பயணியின் பையுடன் தவறுதலாக மாறிப்போயுள்ளது.பாடசாலைக்குச் சென்று தனது பையைத் திறந்து பார்த்த மாணவன், அதற்குள் 5000 ரூபாய் தாள்கள் கட்டுக்கட்டாக இருப்பதைக் கண்டு, உடனடியாக பாடசாலை அதிபர் சிசிர குணரத்னவிடம் தகவல் வழங்கியுள்ளார்.இதனையடுத்து அதிஅர் ஊடாக, குறித்த பையிலிருந்த வங்கிப் புத்தகம் ஒன்றின் உதவியுடன், சம்பந்தப்பட்ட வங்கியினைத் தொடர்பு கொண்டு பணத்தின் உரிமையாளர் யார் என்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.நுகேகொடைப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரே அந்தப் பணத்தின் உரிமையாளர் என்பது தெரியவந்துள்ளது. தனது வீட்டை நிர்மாணிப்பதற்காக வங்கியில் இருந்து இந்தப் பணத்தை அவர் எடுத்துச் சென்றுள்ளார்.சம்பவம் குறித்து மாலம்பே காவல்துறையினருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, இரு தரப்பினரும் காவல்துறை நிலையத்திற்கு அழைக்கப்பட்டு, நிலையப் பொறுப்பதிகாரியின் முன்னிலையில் 10 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாயும் உரிய ஆசிரியையிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில் வறுமை மற்றும் தேவைகள் நிறைந்த சூழலிலும், பேராசை கொள்ளாமல் நேர்மையாகச் செயற்பட்ட மாணவன் அகில தேசப்பிரியவை பொலிஸார் மற்றும் பாசடாலை அதிபர் ஆசிரியர்களும் பாராட்டி வருகின்றனர்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

வென்னப்புவையில் காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு - காதலன் வைத்தியசாலையில்
உள்நாடு

வென்னப்புவையில் காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு – காதலன் வைத்தியசாலையில்

By news team
இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகும் சனத்
விளையாட்டு

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகும் சனத்

By news team
கென்யாவில் அரிய எறும்புகள் கடத்தல்: ஆயிரக்கணக்கான உயிருடன் பிடிப்பு
உலகம்

கென்யாவில் அரிய எறும்புகள் கடத்தல்: ஆயிரக்கணக்கான உயிருடன் பிடிப்பு

By news team
2026-ல் பாடசாலை நேரம் நீட்டிக்கப்படாது – கல்வி அமைச்சு
உள்நாடு

2026-ல் பாடசாலை நேரம் நீட்டிக்கப்படாது – கல்வி அமைச்சு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?