By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

பண்டிகைக் காலத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரிக்கும் அபாயம் – இலங்கை கணினி அவசர பிரிவு எச்சரிக்கை

news team
Last updated: March 13, 2026 11:47 am
By news team
Share
1 Min Read
பண்டிகைக் காலத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரிக்கும் அபாயம் – இலங்கை கணினி அவசர பிரிவு எச்சரிக்கை
SHARE

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இணையத்தில் வெளியாகும் விளம்பரங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.இந்த ஆண்டின் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இணையவழி மோசடிகள் தொடர்பான பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுனுபொல தெரிவித்தார்.தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் தள்ளுபடிகள், பரிசுப் பொருட்கள் அல்லது விசேட சலுகைகள் என்ற பெயரில் போலியான விளம்பரங்கள் மற்றும் லிங்க்குகள் (Links) இணையத்தில் பரவக்கூடிய அபாயம் அதிகம் உள்ளது. இவ்வாறான லிங்க்குகள் மூலம் பயனர்களைப் போலியான இணையதளங்களுக்கு அழைத்துச் சென்று, அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் முக்கியமான தரவுகளைத் திருடும் அபாயம் காணப்படுகின்றது.மேலும், வெசாக் மற்றும் பொசன் பண்டிகைக் காலங்களில் பொசன் மஹா டேட்டா தன்சல் போன்ற பல்வேறு பெயர்களில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற முயற்சிக்கும் மோசடிகளும் இடம்பெறக்கூடும்.எனவே, இணையம் ஊடாகக் கிடைக்கும் அறிமுகமில்லாத லிங்க்குகள் அல்லது விளம்பரங்களைப் பயன்படுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

TAGGED:crimemuthalvanscamtamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கந்தளாயில் கால்வாயில் மூழ்கி 16 வயது மாணவன் உயிரிழப்பு

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதுவெலிய பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நீரில்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

சிறையில் இருக்கும் இம்ரான் கான் உடல்நிலை மோசம் – புதிய சிறைக்கு மாற்ற பாகிஸ்தான் அரசு முடிவு
உலகம்

சிறையில் இருக்கும் இம்ரான் கான் உடல்நிலை மோசம் – புதிய சிறைக்கு மாற்ற பாகிஸ்தான் அரசு முடிவு

By news team
யாழ் பள்ளிவாசலில் தொழுகை நேரத்தில் பரபரப்பு – வாளுடன் இளைஞனை துரத்திய நபர்
உள்நாடு

யாழ் பள்ளிவாசலில் தொழுகை நேரத்தில் பரபரப்பு – வாளுடன் இளைஞனை துரத்திய நபர்

By news team
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் காணி தகராறு – ஒருவர் கொலை, 3 பேர் தலைமறைவு
உள்நாடு

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் காணி தகராறு – ஒருவர் கொலை, 3 பேர் தலைமறைவு

By news team
பண்டாரவளையில் தனியார் பேருந்தில் இளைஞனுடன் பிடிபட்ட மாணவி
உள்நாடு

பண்டாரவளையில் தனியார் பேருந்தில் இளைஞனுடன் பிடிபட்ட மாணவி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?