By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Feb 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

நகை வாங்க வந்தவர் போல நடித்து சங்கிலி அபகரிப்பு – நீதிமன்ற உத்தரவால் விளக்கமறியல்

news team
Last updated: January 25, 2026 6:50 pm
By news team
Share
2 Min Read
நகை வாங்க வந்தவர் போல நடித்து சங்கிலி அபகரிப்பு – நீதிமன்ற உத்தரவால் விளக்கமறியல்
SHARE

ஹட்டன் பிரதான நகரத்தில் உள்ள ஒரு நகைக் கடையில் இருந்து ரூபா 289,000 மதிப்புள்ள தங்க சங்கிலியை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்ற நபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர், நேற்று (24) இரவு, ஹட்டன் பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று (25) ஹட்டன் நீதவான் எஸ். ராமூர்த்தி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட பின்னர், சந்தேக நபரை இந்த மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்திற்குச் சொந்தமான கிவ் தோட்டத்தின் மேல் பகுதியில் வசிக்கும் 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.குறித்த நபர் தங்கச் சங்கிலி வாங்குவதற்காக வந்தவர் போல் கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த பெண் ஊழியர்கள் காண்பித்த பல நகைகளைப் பார்வையிட்டு பின்னர் ஒரு சங்கிலியை பார்த்து கொண்டிருப்பது போல் எடுத்துக் கொண்ட நிலையில், திடீரென கடையிலிருந்து தப்பியோடியுனார்.குறித்த மர்ம நபரின் செயற்பாட்டையும் தங்க சங்கிலியை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடும் பரபரப்பு சிசிடிவி காட்சியையும் அடிப்படையாகக் கொண்டு ஹட்டன் பொலிஸாருக்கும் கிடைக்கப்பெற்ற தகவலை கொண்டு இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தேக நபர் பொகவந்தலாவ கிவ் தோட்டத்தில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் மறைந்திருந்ததாகவும், ஹட்டன் பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், ஹட்டன் பொலிஸ் தலைமையக தலைமை பொலிஸ் பரிசோதகர் உட்பட, சோதனை நடத்தி சந்தேக நபரைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் தங்க நகையை எடுத்துக்கொண்டு ஹட்டனில் இருந்து வட்டவளை வரையிலான தொடருந்து பாதையில் நடந்து சென்று நாவலப்பிட்டியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூபா 169,000க்கு தங்க நகையை அடகு வைத்து பணத்தைப் பெற்று கொண்டுள்ளார். பின்னர், கொழும்பு பகுதியில் படிக்கும் தனது குழந்தைக்கு பணத்தையும், மீதமுள்ள பணத்தில் ஒரு பகுதியை கடன் வழங்குபவர்களுக்கும் கொடுத்ததாக விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.சந்தேக நபரை கைது செய்து போது அவரிடம், ரூபா 10,000 மட்டுமே இருந்ததாக ஹட்டன் பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TAGGED:arrestmuthalvantamilnewstheft
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

அமெரிக்கா–இந்தியா வர்த்தக ஒப்பந்தம்: 25% வரி 18% ஆகக் குறைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியா

அமெரிக்கா–இந்தியா வர்த்தக ஒப்பந்தம்: 25% வரி 18% ஆகக் குறைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு

By news team
கல்முனையில் இறைச்சிக்காக நாய்கள் கொலை – பொலிஸார் விசாரணை
உள்நாடு

கல்முனையில் இறைச்சிக்காக நாய்கள் கொலை – பொலிஸார் விசாரணை

By news team
ஜப்பானிய மாணவர்கள் இலங்கையில் சிரமதானம்: வெலிகந்த சுசிரிகமவில் வீதி புனரமைப்பு
உள்நாடு

ஜப்பானிய மாணவர்கள் இலங்கையில் சிரமதானம்: வெலிகந்த சுசிரிகமவில் வீதி புனரமைப்பு

By news team
போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமையான மகனை தந்தையால் வெட்டிப் படுகொலை
உள்நாடு

போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமையான மகனை தந்தையால் வெட்டிப் படுகொலை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?