By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Feb 20, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

குடும்பமாக சென்ற முச்சக்கர வண்டி விபத்து – தாய், பிள்ளைகள் பலி; தந்தை காயம்

news team
Last updated: December 24, 2025 10:31 am
By news team
Share
1 Min Read
குடும்பமாக சென்ற முச்சக்கர வண்டி விபத்து – தாய், பிள்ளைகள் பலி; தந்தை காயம்
SHARE

தெஹியத்தகண்டிய-மஹியங்கனை பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.தந்தை மட்டும் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், ஏனையவர்கள் ஒன்றாகவே உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.கடந்த 17ஆம் திகதி ஏற்பட்ட விபத்தில் தாயும் பிள்ளையும் ஸ்தலத்தில் பலியானதுடன், மற்றுமொரு பிள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.குடும்பமாக முச்சக்கர வண்டியில் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த சாரதியான தந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.விபத்தில் டிஸ்னா ஐரங்கனி என்ற இளம் தாயும் 10 வயதான பிம்சார சதேவ் அபேவர்தன, 4 வயதான செத்மினா டின்ஷான் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரிகைகள் ஒன்றாக நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்தில் உயிரிழந்த மாணவன், புலமைப்பரிசில் தேர்வில் 163 மதிப்பெண்களைப் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடிக்கொடுத்த திறமையானவர் என பாடசாலையின் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த மாணவனுக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக நாம் எண்ணியிருந்த நிலையில், இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளதாக அதிபர் கவலை வெளியிட்டுள்ளார்.

TAGGED:accidentdeathmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

வீட்டுப்பணிக்கு சென்ற சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் – 37 வயது நபர் கைது
உள்நாடு

வீட்டுப்பணிக்கு சென்ற சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் – 37 வயது நபர் கைது

By news team
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – ஜனவரி 09 வரை விளக்கமறியல்
உள்நாடு

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – ஜனவரி 09 வரை விளக்கமறியல்

By news team
அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு சம்பவம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்
உள்நாடு

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு சம்பவம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்

By news team
ரஷ்யாவில் படித்த மாணவனை வைத்திய பீடத்தில் சேர்க்க நீதிமன்ற உத்தரவு
உள்நாடு

ரஷ்யாவில் படித்த மாணவனை வைத்திய பீடத்தில் சேர்க்க நீதிமன்ற உத்தரவு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?