By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Feb 20, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

கல்கிசை பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் தப்பியோட்டம் – மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

news team
Last updated: February 20, 2026 10:10 am
By news team
Share
1 Min Read
கல்கிசை பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் தப்பியோட்டம் – மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்
SHARE

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு கல்கிசை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இருந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபர், தப்பியோடிய சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் ஒரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இரவு நேரப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய மற்றும் உதவிப் பணியாளராகக் கடமையாற்றிய இரண்டு சார்ஜன்ட்களும், சந்தேக நபரின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுமே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.குறித்த பெண் சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மொரட்டுவை விசேட அதிரடிப்படை முகாமின் விசேட நடவடிக்கைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.ரத்மலானை மெலிபன் சந்தி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து 36,650 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டிருந்தது.தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் கல்கிசை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேக நபர், கடந்த 16ஆம் திகதி தனது இயற்கை உபாதையைத் தீர்க்க வேண்டும் எனக் கூறி பெண் கான்ஸ்டபிளுடன் கழிவறைக்குச் சென்றபோது, அங்கிருந்து தப்பிச் சென்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஏறித் தப்பியோடியுள்ளார்.எவ்வாறாயினும், தப்பியோடிய சந்தேக நபர் 8 மணித்தியாலங்களுக்குப் பிறகு அன்றைய தினமே தலவத்துகொட கிம்புலாஎல பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவினரால் மீண்டும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

TAGGED:arrestdrugmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

Website image 1920 x 1080 px 1 4
உள்நாடு

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டு வேலை மோசடி: 5 பேர் கைது

By news team
சர்வதேச சந்தை தாக்கம்- இலங்கையில் தங்க விலை கணிசமாக உயர்வு
வணிகம்

சர்வதேச சந்தை தாக்கம்- இலங்கையில் தங்க விலை கணிசமாக உயர்வு

By news team
காதலரை திருமணம் செய்த மகள் “இறந்ததாக” அறிவிப்பு – உருவ பொம்மைக்கு இறுதிச்சடங்கு நடத்திய குடும்பம்
இந்தியா

காதலரை திருமணம் செய்த மகள் “இறந்ததாக” அறிவிப்பு – உருவ பொம்மைக்கு இறுதிச்சடங்கு நடத்திய குடும்பம்

By news team
பொலிஸ் கட்டளையை மீறி தப்பிச் சென்ற வேன்: துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி
உள்நாடு

பொலிஸ் கட்டளையை மீறி தப்பிச் சென்ற வேன்: துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?