By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு

news team
Last updated: June 13, 2026 2:35 pm
By news team
Share
1 Min Read
எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு
SHARE

எரிபொருளுக்காக அரசாங்கம் வழங்கி வரும் மானியங்கள் ஜூன் மாதத்துடன் நிறைவடைவதாக பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள், அரசாங்க நிதி பற்றிய குழு முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.இதன்போது, பொது நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அதிகாரிகள், எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அரசாங்கம் இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.எரிபொருள் நுகர்வைக் குறைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றும், அதற்கமையவே எரிபொருள் விலையை உயர்த்துவது போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த மே 13 ஆம் திகதி தெரிவித்திருந்தார்.நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்திருந்த ஜனாதிபதி, உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் ஒரு லீட்டர் டீசலின் விலை 720 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.இருப்பினும், அரசாங்கத்தினால் ஒரு லீட்டர் டீசலுக்காக 100 ரூபாய் மானியம் செலவிடப்பட்டு, 392 ரூபாய் என்ற விலைக்கு மக்களுக்கு வழங்கப்படுவதன் மூலமும் கூட்டுத்தாபனம் நட்டத்தை எதிர்கொண்டு வருவதாகவும், இதனை நீண்ட காலத்திற்கு முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

சிம் அட்டை விவகாரத்தில் தாயாருடன் ஏற்பட்ட தகராறு; 24 வயது இளைஞர் உயிரிழப்பு
உள்நாடு

சிம் அட்டை விவகாரத்தில் தாயாருடன் ஏற்பட்ட தகராறு; 24 வயது இளைஞர் உயிரிழப்பு

By news team
நெல்லியடி பகுதியில் மருமகனின் வாள்வெட்டு – மாமியார் உயிரிழப்பு மாமனார் படுகாயம்
உள்நாடு

நெல்லியடி பகுதியில் மருமகனின் வாள்வெட்டு – மாமியார் உயிரிழப்பு மாமனார் படுகாயம்

By news team
கனடா மீது 50% புதிய வரி: அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையை நிறுத்திய பிரதமர் கார்னி
உலகம்

கனடா மீது 50% புதிய வரி: அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையை நிறுத்திய பிரதமர் கார்னி

By news team
கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ரூ.10,000க்கு மேல் வாங்குபவர்களுக்கு ஆயுள் காப்புறுதி இலவசம்
உள்நாடு

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ரூ.10,000க்கு மேல் வாங்குபவர்களுக்கு ஆயுள் காப்புறுதி இலவசம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?