இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில் 10 வயதுக்கும் குறைந்த 181 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அத்துடன், கடந்த 28 ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதிக்குள் ஈரானில் 1,097 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருகின்றது.அத்துடன், ஈரானும் பதில் தாக்குதல் நடத்துவதால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் குறைந்தது 104 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இராணுவ முகாம்கள், மருத்துவ நிலையங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மீது இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த தாக்குதலில் காயமடைந்த பொதுமக்களின் எண்ணிக்கை 5,402 ஆக அதிகரித்துள்ளதுடன், அவர்களுள் 100 பேர் சிறுவர்கள் என பிபிசி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
