By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

இலங்கை கடற்பரப்பில் இராணுவ நடவடிக்கை இல்லை என அமெரிக்கா உறுதி தர வேண்டும் -ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை

news team
Last updated: March 7, 2026 11:25 am
By news team
Share
1 Min Read
இலங்கை கடற்பரப்பில் இராணுவ நடவடிக்கை இல்லை என அமெரிக்கா உறுதி தர வேண்டும் -ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை
SHARE

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் இனிமேல் இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என்பதற்கான உத்தியோகபூர்வ உறுதியை அமெரிக்காவிடமிருந்து இலங்கை அரசு பெற்றுக்கொள்ள வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.கட்சியின் தலைமையகம் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்துக்குள் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலொன்றினால் ஈரான் நாட்டுப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டமை தொடர்பில், இலங்கை அரசு தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றமை கவலையளிக்கின்றது. அரசின் இந்த மௌனப் போக்கை ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.இவ்வாறான மோதல் நடவடிக்கைகள் காரணமாக, இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயம் ஒரு ‘போர் வலயம்’ போல் மாற்றமடைந்துள்ளது. இது நாட்டின் வணிக நலன்களுக்குப் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.மேலும், இவ்வாறான பதற்றமான சூழலால் சர்வதேச கப்பல் போக்குவரத்துச் செலவுகள் மற்றும் காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.இதன் நேரடி விளைவாக இலங்கையில் வாழ்க்கைச் செலவு மேலும் உயர்ந்து, நாட்டின் பொருளாதாரத்துக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படும்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

TAGGED:muthalvanRanil WickremesingheSri Lanka Political Newstamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

தையிட்டியில் ‘ராஜமகா விகாரை’ எனக் காட்டப்படும் விகாரை போலியானது – வடக்கின் பிரதம சங்க நாயக்க தேரர்
உள்நாடு

தையிட்டியில் ‘ராஜமகா விகாரை’ எனக் காட்டப்படும் விகாரை போலியானது – வடக்கின் பிரதம சங்க நாயக்க தேரர்

By news team
கொழும்பு ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு – மன்னாரைச் சேர்ந்த 20 வயது இளைஞன் உயிரிழப்பு
உள்நாடு

கொழும்பு ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு – மன்னாரைச் சேர்ந்த 20 வயது இளைஞன் உயிரிழப்பு

By news team
இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் ஆரம்பம் – 2026ல் அறிமுகம்
உள்நாடு

இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் ஆரம்பம் – 2026ல் அறிமுகம்

By news team
இரண்டு வருடங்கள் கழித்து நத்தார் பண்டிகையை கொண்டாடும் பெத்லகேம்
உலகம்

இயேசு பிறந்த பெத்லகேமில் இரண்டு வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் நத்தார் உற்சாகம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?