நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், சிட்னியைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொறியியலாளரான சந்திரசேகரன் முரளிதரன் (47), அவரது மனைவி சைலஜா (42) மற்றும் அவர்களது மகன்களான அஷ்வின் (14), ஆருஷ் (11) ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.
கைலாஷ் மலை யாத்திரைக்காக நேபாளம் சென்றிருந்த இந்தக் குடும்பத்தினருடன் புதன்கிழமை காலை உணவுக்குப் பின்னர் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நேபாள வெள்ளத்தில் இவர்களுடன் சேர்த்து குறைந்தது 39 அவுஸ்திரேலியர்கள் காணாமல் போயுள்ளதாக அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார்.காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இதனிடையே, சந்திரசேகரன் முரளிதரன் உள்ளிட்ட நால்வரும் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என எதிர்பார்த்து அவுஸ்திரேலிய தமிழ் சமூகமும் உறவினர்களும் கவலையுடன் காத்திருக்கின்றனர்.
நேபாள வெள்ளத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட அவுஸ்திரேலிய தமிழ் குடும்பம் மாயம்

Leave a Comment Leave a Comment