முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு **‘மகிழ்ச்சியான காலத்தின் ஜனாதிபதி’** என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.கொழும்பிலுள்ள டெம்பிள் ட்ரீஸ் வளாகத்தில் நடைபெற்ற விசேட சர்வதேச விருது வழங்கும் நிகழ்வில் இந்த கௌரவம் அவருக்கு வழங்கப்பட்டது.நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இந்திய நடிகரும் **KGF** திரைப்படத் தொடரில் நடித்தவருமான **கருட ராம்** உள்ளிட்ட சர்வதேச விருந்தினர்களும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.Global Brand Awards 2026 மற்றும் SHE FOR THE NATION – Season 2 ஆகிய நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 29ஆம் திகதி இந்த விசேட நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வில் இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வர்த்தகத் தலைவர்கள், தொழில்முனைவோர், பல்வேறு துறைசார் நிபுணர்கள், பெண்கள் தலைவர்கள் மற்றும் சர்வதேச வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
‘மகிழ்ச்சியான காலத்தின் ஜனாதிபதி’ விருது – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கௌரவிப்பு

Leave a Comment Leave a Comment