By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

கனடாவில் 17 ஆண்டுகள் விமான ஓட்டுநர் உரிமம் இன்றி பணியாற்றிய நபர் கைது

news team
Last updated: June 10, 2026 4:13 pm
By news team
Share
1 Min Read
கனடாவில் 17 ஆண்டுகள் விமான ஓட்டுநர் உரிமம் இன்றி பணியாற்றிய நபர் கைது
SHARE

விமான ஓட்டுநர் உரிமம் எதுவுமின்றி, 17 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரதம விமானியாகப் பணியாற்றிய ஒருவரை கனடா நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.2009ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், இவர் கனடாவிற்குள் உள்நாட்டு வான்பயணங்கள் உட்பட 900க்கும் அதிகமான வான்பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் முறையான தகுதிகள் இல்லாமல் போயிங் 767, 777 மற்றும் 787 ரக விமானங்களை இயக்கி மில்லியன் கணக்கான டொலர்களை சம்பாதித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.மேலும், குறிப்பிட்ட இந்த காலப்பகுதியில் வர்த்தக விமானங்களை இயக்குவதற்கான முறையான உரிமமோ அல்லது சரக்கு போக்குவரத்து விமானங்களை இயக்குவதற்கான செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரமோ இவரிடம் இருந்திருக்கவில்லை என அந்நாட்டு காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.இத்தகவல் வெளிவந்ததை அடுத்து, உடனடியாகச் செயற்பட்ட அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் அக்குறிப்பிட்ட நபரின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.அத்துடன், ஆயிரக்கணக்கான விமானப் பயணிகளின் உயிர்களை ஆபத்துக்குள்ளாக்கியமை தொடர்பாக அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில் குறித்த நபர் இம்மாதம் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஒடிசாவில் 7-ம் வகுப்பு மாணவியை பல முறை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 5 ஆசிரியர்கள் கைது
இந்தியா

ஒடிசாவில் 7-ம் வகுப்பு மாணவியை பல முறை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 5 ஆசிரியர்கள் கைது

By news team
வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம்
உள்நாடு

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம்

By news team
அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு சம்பவம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்
உள்நாடு

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு சம்பவம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்

By news team
முதியோர் பராமரிப்பில் ரோபோக்களை பயன்படுத்தும் சீனா
உலகம்

முதியோர் பராமரிப்பில் ரோபோக்களை பயன்படுத்தும் சீனா

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?