By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

கண்டி தலாத்துஒய விபத்தில் இரண்டு வயது சிறுமி உயிரிழப்பு

news team
Last updated: June 4, 2026 8:11 am
By news team
Share
1 Min Read
கண்டி தலாத்துஒய விபத்தில் இரண்டு வயது சிறுமி உயிரிழப்பு
SHARE

கண்டி – தலாத்துஒய, மயிலபிட்டிய பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு வருடமும் இரண்டு மாதங்களும் மதிக்கத்தக்க சிறுமியொருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.நேற்று (03) பிற்பகல் தென்னகும்பூர – ராகல வீதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.தென்னகும்பூர நோக்கி பயணித்த சொகுசு கார் ஒன்று, மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது, எதிர்த்திசையில் வந்த மூன்று சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்து நேரிட்ட சமயத்தில், அந்தச் சிறுமி முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில் அமர்ந்து பயணித்துள்ளதாகத் தெரியவருகிறது.இந்த விபத்தினால் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயமடைந்துள்ளதோடு, அவர்கள் உடனடியாக ஹங்குரன்கெத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவி சிகிச்சை பெற்று வந்த அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் உனுவின்ன பகுதியைச் சேர்ந்த சிறுமியாவார்.காயமடைந்த சிறுமியின் தாயும், முச்சக்கரவண்டியை செலுத்திய தந்தையும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி தற்போது தலாத்துஒய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்து தலாத்துஒய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TAGGED:accidentdeathmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

வவுனியா மடுக்கந்தபகுதியில் கஞ்சா செடி பயிரிட்டவர் கைது – போதைத்தடுப்பு பிரிவு நடவடிக்கை
உள்நாடு

வவுனியா மடுக்கந்தபகுதியில் கஞ்சா செடி பயிரிட்டவர் கைது – போதைத்தடுப்பு பிரிவு நடவடிக்கை

By news team
இலங்கையில் பதிவு செய்யாத SIM அட்டைகள் 9 இலட்சம் – குற்றக் கட்டுப்பாட்டுக்காக புதிய நடவடிக்கை
உள்நாடு

இலங்கையில் பதிவு செய்யாத SIM அட்டைகள் 9 இலட்சம் – குற்றக் கட்டுப்பாட்டுக்காக புதிய நடவடிக்கை

By news team
மே மாதத்தில் எரிபொருள் விலை கடுமையாக உயரும் அபாயம் – அமைச்சர் எச்சரிக்கை
உள்நாடு

மே மாதத்தில் எரிபொருள் விலை கடுமையாக உயரும் அபாயம் – அமைச்சர் எச்சரிக்கை

By news team
நாமல்–Airbus மின்னஞ்சல் குற்றச்சாட்டுகளை SLPP நிராகரிப்பு
உள்நாடு

நாமல்–Airbus மின்னஞ்சல் குற்றச்சாட்டுகளை SLPP நிராகரிப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?