By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

குறைந்த காற்றழுத்தம் காரணமாக கடும் மழை – பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

news team
Last updated: May 13, 2026 7:41 am
By news team
Share
1 Min Read
குறைந்த காற்றழுத்தம் காரணமாக கடும் மழை – பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
SHARE

மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, காலி, மாத்தறை மாவட்டங்களுக்குப் பலத்த மழை குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ளது.அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இலங்கைக்கு அருகாமையில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.இந்த அறிவித்தல் இன்று (13) காலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்டதுடன், இது இன்று மாலை 3.30 மணி வரை செல்லுபடியாகும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

TAGGED:muthalvantamilnewsweatherweather update
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

வித்யா கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி – பெண் மருத்துவரிடம் அத்துமீற முயற்சி
உள்நாடு

வித்யா கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி – பெண் மருத்துவரிடம் அத்துமீற முயற்சி

By news team
புத்தாண்டு காலத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை
உள்நாடு

புத்தாண்டு காலத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

By news team
மே 6க்கு பின் மழை அதிகரிப்பு – இலங்கையில் பல மாகாணங்களுக்கு வானிலை எச்சரிக்கை
உள்நாடு

மே 6க்கு பின் மழை அதிகரிப்பு – இலங்கையில் பல மாகாணங்களுக்கு வானிலை எச்சரிக்கை

By news team
ரஷ்யாவில் படித்த மாணவனை வைத்திய பீடத்தில் சேர்க்க நீதிமன்ற உத்தரவு
உள்நாடு

ரஷ்யாவில் படித்த மாணவனை வைத்திய பீடத்தில் சேர்க்க நீதிமன்ற உத்தரவு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?