By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

இலங்கையில் மின்சாரக் கட்டண முறையில் பெரிய மாற்றம் – ஆண்டுக்கு ஒருமுறை திருத்தம் செய்ய எரிசக்தி அமைச்சு நடவடிக்கை

news team
Last updated: April 19, 2026 8:44 am
By news team
Share
1 Min Read
இலங்கையில் மின்சாரக் கட்டண முறையில் பெரிய மாற்றம் – ஆண்டுக்கு ஒருமுறை திருத்தம் செய்ய Mஎரிசக்தி அமைச்சு நடவடிக்கை
SHARE

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை மாற்றியமைக்கும் முறைக்குப் பதிலாக, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கட்டணத்தைத் திருத்தும் புதிய சூத்திரத்தை அறிமுகப்படுத்த எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரியவருகின்றது.இந்தப் புதிய கட்டணச் சூத்திரத்தை இறுதி செய்வது தொடர்பாக எரிசக்தி அமைச்சும் நிதி அமைச்சும் தற்போது பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.ஆண்டின் முதல் சில மாதங்கள் வறட்சியாகவும், ஆண்டின் இறுதியில் அதிக மழையும் கிடைப்பதை இந்தப் புதிய முறை கணக்கில் கொள்ளும்.தற்போதைய முறையில் வறட்சி காலத்தில் கட்டணம் அதிகரிப்பதையும், மழைக்காலத்தில் குறைவதையும் நுகர்வோர் எதிர்கொள்கின்றனர்.இந்தநிலையில், புதிய முறையின்படி ஆண்டின் தொடக்கத்தில் ஒருமுறை மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்படும்.இதனால் முதல் ஆறு மாதங்களில் மின்சார சபை நட்டத்தைச் சந்தித்தாலும், ஆண்டின் இரண்டாம் பாதியில் கிடைக்கும் வருவாய் மூலம் அந்த நட்டத்தை ஈடுகட்ட முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.அத்துடன், ஒரே மாதிரியான மின்சாரக் கட்டணம் அமுலில் இருப்பதால், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் தங்களது செலவுகளை முன்கூட்டியே திட்டமிட முடியும்.மின்சாரக் கட்டணம் அடிக்கடி மாறுவதால் பொருட்களின் விலைகளும் அடிக்கடி உயர்கின்றன. ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே கட்டண மாற்றம் செய்யப்படுவதால், சந்தையில் பொருட்களின் விலைகள் குறுகிய காலத்தில் பாரிய அளவில் தளம்பலாவது தவிர்க்கப்படும்.இந்த நிலையில், குறித்த சூத்திரம் இறுதி செய்யப்பட்ட பின்னர், மின்சாரத் துறை ஒழுங்குமுறை அமைப்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

TAGGED:cebmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இலங்கையில் அனைத்து முச்சக்கரவண்டிகளும் செயலி அடிப்படையில் இயங்க வேண்டும்: தேசிய போக்குவரத்து ஆணையம்
உள்நாடு

இலங்கையில் அனைத்து முச்சக்கரவண்டிகளும் செயலி அடிப்படையில் இயங்க வேண்டும்: தேசிய போக்குவரத்து ஆணையம்

By news team
வித்யா கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி – பெண் மருத்துவரிடம் அத்துமீற முயற்சி
உள்நாடு

வித்யா கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி – பெண் மருத்துவரிடம் அத்துமீற முயற்சி

By news team
அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு சம்பவம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்
உள்நாடு

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு சம்பவம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்

By news team
கேகாலையில் O/L பரீட்சை எழுதவிருந்த 16 வயது மாணவிக்கு பிறந்த குழந்தை – பொலிஸ் விசாரணை
உள்நாடு

கேகாலையில் O/L பரீட்சை எழுதவிருந்த 16 வயது மாணவிக்கு பிறந்த குழந்தை – பொலிஸ் விசாரணை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?