By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

இலங்கையின் எரிபொருள் நெருக்கடிக்கு சீனா உதவி – புதிய கப்பல் ஏப்ரலில்

news team
Last updated: April 5, 2026 7:15 am
By news team
Share
1 Min Read
இலங்கையின் எரிபொருள் நெருக்கடிக்கு சீனா உதவி – புதிய கப்பல் ஏப்ரலில்
SHARE

இலங்கையில் நிலவும் பாரிய எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், சீனா முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்க முன்வந்துள்ளது.அத்துடன் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது.இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹொங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்து இந்த ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார்.இதன்படி, சீனாவிலிருந்து முதலாவது எரிபொருள் கப்பல் ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது ‘சினோபெக்’ நிறுவனத்தின் வழமையான இருப்புகளுக்கு மேலதிகமானதாகும்.எரிபொருள், நிலக்கரி மற்றும் உரம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக ரஷ்யாவுடன் அரசாங்கங்களுக்கு இடையிலான நேரடி ஒப்பந்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இது குறித்து மேலதிக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த மாதம் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், அங்கிருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதியை வழங்குமாறு இலங்கை அமெரிக்காவிடம் கோரியுள்ளது.அமெரிக்க விசேட தூதுவர் செர்ஜியோ கோர் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்தபோது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய 30 நாள் சலுகைக்காலம் ஏப்ரல் 11 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.எனினும், குறைந்தது மூன்று மாத கால அனுமதியாவது கிடைத்தால் மட்டுமே ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தைத் தொடர முடியும் என அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது.”இலங்கையின் இக்கட்டான சூழ்நிலையில் சீனா ஒரு நம்பிக்கைக்குரிய நண்பனாகப் நேர்மறையான பதிலளித்துள்ளது. அதேவேளை, நாட்டின் நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ரஷ்யாவுடனான உறவுகளையும் நாம் பலப்படுத்தி வருகின்றோம்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இன்றைய வானிலை அறிக்கை
உள்நாடு

இன்றைய வானிலை அறிக்கை

By news team
ஹட்டனில் அதிநவீன சஃபாரி பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்
உள்நாடு

ஹட்டனில் அதிநவீன சஃபாரி பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்

By news team
உற்சவ மண்டப உணவுப் பட்டியல் விலை உயர்வு: புதிய முன்பதிவுகளுக்கு 20% வரை கட்டணம் அதிகரிப்பு
உள்நாடு

உற்சவ மண்டப உணவுப் பட்டியல் விலை உயர்வு: புதிய முன்பதிவுகளுக்கு 20% வரை கட்டணம் அதிகரிப்பு

By news team
மஹியங்கனையில் குடும்பத் தகராறு: மனைவியை துப்பாகிச்சூடு நடத்திய கணவன் தப்பியோட்டம்
உள்நாடு

மஹியங்கனையில் குடும்பத் தகராறு: மனைவியை துப்பாகிச்சூடு நடத்திய கணவன் தப்பியோட்டம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?