By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

QR குறியீடு மோசடி எச்சரிக்கை: போலி இணையதளங்கள் மூலம் தரவு திருட்டு

news team
Last updated: March 19, 2026 1:53 pm
By news team
Share
1 Min Read
QR குறியீடு மோசடி எச்சரிக்கை: போலி இணையதளங்கள் மூலம் தரவு திருட்டு
SHARE

எரிபொருள் ஒதுக்கீட்டிற்கான QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையத்தளங்கள் மூலம் மக்களின் தரவுகள் திருடப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இது குறித்து மேலும் கூறுகையில்:

“வாகன உரிமையாளர்கள் மாறிய தரவுகளை நாம் முறைமையிலிருந்து நீக்கியுள்ளோம். அதேபோல், வாகனம் கைவசம் இருந்தும் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி இலக்கம் கைவசம் இல்லாத சுமார் 12 இலட்சம் தரவுகளையும் நீக்க வேண்டியிருந்தது. அவ்வாறு செய்யாவிடில் அவர்களுக்கு புதிய QR குறியீட்டைப் பெற முடியாது.தற்போது வரை சுமார் 55 இலட்சம் பேர் QR குறியீட்டைப் பெற்றுள்ளனர். வாகனத்தை வைத்திருந்தும், பதிவு செய்த தொலைபேசி இலக்கம் இல்லாத உண்மையான உரிமையாளர்கள், நேற்று (18) இரவு முதல் தற்போது வைத்துள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக உள்நுழைந்து வாகனத் தரவுகளை உள்ளிட முடியும். நாம் பழைய தரவுகளை மேலெழுதி (Overwrite) உங்கள் பெயருக்கு அதனை மாற்றித் தருவோம். இதன்போது நீங்கள் வாகனத்தின் உரிமையாளர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.யாராவது மற்றுமொருவரின் QR குறியீட்டை இரத்து செய்துவிட்டு அதனைத் தவறாகப் பயன்படுத்தினால், கணினி குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்.தற்போது மக்களின் தரவுகளையும் வாகனங்களின் செஸி (Chassis) இலக்கங்களையும் சேகரிப்பதற்காக ஐந்து அல்லது ஆறு போலி இணையத்தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளதை நாம் அவதானித்துள்ளோம். எனவே, இவ்வாறான இடங்களில் உங்களின் தரவுகளை வழங்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகள் ஊடாகச் செல்லாமல், நீங்கள் நுழையும் இணையப் பக்கம் சரியானது தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.”

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

கனடாவில் 17 ஆண்டுகள் விமான ஓட்டுநர் உரிமம் இன்றி பணியாற்றிய நபர் கைது
உலகம்

கனடாவில் 17 ஆண்டுகள் விமான ஓட்டுநர் உரிமம் இன்றி பணியாற்றிய நபர் கைது

By news team
மே மாதம் வரை கடும் வெப்பம் தொடரும் – வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை
உள்நாடு

மே மாதம் வரை கடும் வெப்பம் தொடரும் – வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

By news team
குறைந்த காற்றழுத்தம் காரணமாக கடும் மழை – பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
உள்நாடு

குறைந்த காற்றழுத்தம் காரணமாக கடும் மழை – பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

By news team
290 வகை உணவுகளைச் சமைத்து மருமகனை பிரமிக்க வைத்த மாமியார்
இந்தியா

290 வகை உணவுகளைச் சமைத்து மருமகனை பிரமிக்க வைத்த மாமியார்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?