By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்: இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – QR முறையில் விநியோகம் தொடக்கம்

news team
Last updated: March 15, 2026 1:05 pm
By news team
Share
1 Min Read
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்: இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – QR முறையில் விநியோகம் தொடக்கம்
SHARE

எரிபொருள் விநியோகத்திற்காக QR குறியீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூரு நெத்திகுமார தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் அவசர எரிபொருள் தேவை ஏற்பட்டால் அதனைப் பெற்றுக்கொள்வது குறித்து இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவை மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.இன்று (15) காலை 6:00 மணி முதல் QR குறியீட்டு முறைக்கு அமைவாக எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முன்னர் QR குறியீட்டைப் பெற்ற, அதே வாகனம் மற்றும் தொலைபேசி இலக்கத்தை வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.பழைய QR குறியீடு இருப்பின் அதையே பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.புதிதாக QR குறியீட்டைப் பெற வேண்டியவர்கள் https://fuelpass.gov.lk/ என்ற இணையதளத்தின் மூலம் அதனைப் பதிவிறக்கம் செய்யலாம். வாகன உரிமையாளர் மாற்றம், தொலைபேசி இலக்க மாற்றம் அல்லது புதிய பதிவுகளுக்காக அந்த இணையதளத்திலுள்ள ‘Vehicle Registration’ பகுதி இன்னும் ஒரு மணித்தியாலத்திற்குள் புதுப்பிக்கப்படும் (Update) என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இன்றைய தினத்திலிருந்து QR குறியீடு இன்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த பணிப்பாளர் மேலும் கூறுகையில்:
“கடந்த சில நாட்களாகப் பலரும் எரிபொருளைச் சேமித்து வைப்பதையும், ஊடகச் சந்திப்புகள் மூலம் எரிபொருள் வரிசைகளை உருவாக்குவதையும் அவதானித்தோம். இதனால் ஒரு அபாயகரமான நிலை ஏற்படலாம் என்பதால் தான் QR முறையை மீண்டும் கொண்டுவந்தோம். மற்றபடி எரிபொருளுக்குப் பிரச்சினை இல்லை. எவரும் வரிசையில் நிற்காமல் எரிபொருளைப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும்” எனத் தெரிவித்தார்.

TAGGED:muthalvanpetrol pricetamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

வெளிநாட்டு சுற்றுலாப் பெண் மீது பாலியல் வன்கொடுமை- 2 வழிகாட்டிகள் கைது

மாத்தறை வெலிகம பகுதியில் துருக்கி நாட்டுப் பெண் ஒருவர் நேற்று பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக தகவல்கள்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஹபரணையில் நோயாளர் காவு வண்டி–லொறி மோதல்: 5 பேர் காயம்
உள்நாடு

ஹபரணையில் நோயாளர் காவு வண்டி–லொறி மோதல்: 5 பேர் காயம்

By news team
கிரிந்த போதைப்பொருள் வழக்கு: தகவல் தருநரை கொலை செய்ய ஒப்பந்தம் – வாடகை கொலையாளி கைது
உள்நாடு

கிரிந்த போதைப்பொருள் வழக்கு: தகவல் தருநரை கொலை செய்ய ஒப்பந்தம் – வாடகை கொலையாளி கைது

By news team
ஈரான் நோக்கி அமெரிக்க போர்க்கப்பல்கள் – ஹவுதி தாக்குதல் மிரட்டல்
உலகம்

ஈரான் நோக்கி அமெரிக்க போர்க்கப்பல்கள் – ஹவுதி தாக்குதல் மிரட்டல்

By news team
நிபந்தனைகள் மீறப்பட்டால் தொலைக்காட்சி அலைவரிசை அனுமதிப்பத்திரம் ரத்து – ஊடக அமைச்சர்
உள்நாடு

நிபந்தனைகள் மீறப்பட்டால் தொலைக்காட்சி அலைவரிசை அனுமதிப்பத்திரம் ரத்து – ஊடக அமைச்சர்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?