By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

மண்முனை பகுதியில் வெற்றிலை மென்று வெதுப்பக உணவு விற்ற நபருக்கு எதிராக சுகாதார நடவடிக்கை

news team
Last updated: March 9, 2026 3:33 pm
By news team
Share
1 Min Read
மண்முனை பகுதியில் வெற்றிலை மென்று வெதுப்பக உணவு விற்ற நபருக்கு எதிராக சுகாதார நடவடிக்கை
SHARE

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (08) இரவு வெற்றிலை மென்று கொண்டு வெதுப்பக வண்டியில் வெதுப்பக உணவுப் பொருட்களை விற்பனைக்குக் கொண்டு சென்ற நபர் ஒருவருக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதனிடையில் குறித்த வண்டியின் சாரதி மருத்துவ சான்றிதழையும் பெற்றிருக்கவில்லை எனவும் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவிக்கின்றார்.இந்நிலையில் வெதுப்பக வண்டிகளில் சினிமா பாடல்களை பெரும் சத்தமாக ஒலி எழுப்பிச் செல்வதனால் அதிக சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதனால், வெதுப்பக வண்டிகளுக்கென பிரத்தியேகமானதொரு ஒலியை ஏற்கனவே வழங்கியிருந்த போதிலும் அதனை அவர் கடைப்பிடிக்காததனாலும், பொதுச் சுகாதார பரிசோதகர் ஊடாக அதற்காகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு எவராவது செயற்படுவார்களாயின் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் மேலும் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து வெதுப்பக உரிமையாளர்களுடனும், விசேட கலந்துரையாடல் கூட்டம் கடந்த மாதம் பிரதேச சபையில் இடம்பெற்று இருந்த நிலையில், அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக பொதுச் சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைக்கமைய சுகாதார விதி முறைகளுக்கு அமையவே வெதுப்பக உணவுப் பொருட்களை வியாபாரம் செய்ய வேண்டும் என அப்பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜினால் ஏற்கனவே சகல வெதுக்கப உணவு விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கந்தளாயில் கால்வாயில் மூழ்கி 16 வயது மாணவன் உயிரிழப்பு

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதுவெலிய பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நீரில்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

எரிபொருள் விநியோகம் பாதிப்பு – சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்
உள்நாடு

எரிபொருள் விநியோகம் பாதிப்பு – சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்

By news team
அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரிய ஈரான் ஜனாதிபதி– பிராந்திய தாக்குதல்கள் நிறுத்தப்படும் என ஈரான் அறிவிப்பு
உலகம்

அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரிய ஈரான் ஜனாதிபதி– பிராந்திய தாக்குதல்கள் நிறுத்தப்படும் என ஈரான் அறிவிப்பு

By news team
தரம் 06க்கு மேற்பட்ட 1 மில்லியன் மாணவிகளுக்கு அணையாடைகள் – 2026 முதல் நாடு முழுவதும் தேசியத் திட்டம்
உள்நாடு

தரம் 06க்கு மேற்பட்ட 1 மில்லியன் மாணவிகளுக்கு அணையாடைகள் – 2026 முதல் நாடு முழுவதும் தேசியத் திட்டம்

By news team
ஐபோன் பயனர்களுக்கு அப்பிள் அவசர எச்சரிக்கை: உடனடி மென்பொருள் புதுப்பிப்பு அவசியம்
தொழில்நுட்பம்

ஐபோன் பயனர்களுக்கு அப்பிள் அவசர எச்சரிக்கை: உடனடி மென்பொருள் புதுப்பிப்பு அவசியம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?